April 18, 2024

51வது அமர்வின் புதிய தீர்மானத்துக்கு 2024 செப்டம்பர் வரை அவகாசம்! பனங்காட்டான்


இப்போதைய 51வது அமர்வில் நிறைவேற்றப்படும் தீர்மானமானது 53, 54, 55, 57ம் அமர்வுகளுக்கென கால அவகாசம் வழங்கி இலங்கையை மகிழ்ச்சிப்படுத்தக்கூடியது. ஜெனிவாவை பதின்மூன்று வருடங்கள் நம்பியிருக்கும் தமிழருக்கு நீதி கிடைக்க இன்னும் எத்தனை இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும்?

கடந்து போகின்ற இந்த நாட்கள் பல வகையிலும் முக்கியமானதாக பதிவாகின்றது. சர்வதேச அரங்கில் மட்டுமன்றி உள்;ர் மட்டத்திலும் இந்தப் பொழுது பேசப்படுவதாகியுள்ளது. 

இலங்கை இந்தியா போன்ற நாடுகளைக் கட்டியாண்ட பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் சின்னமாகத் திகழ்ந்த எலிசபெத் அரசியின் மறைவு – அவரது எழுபது ஆண்டுகால முடியாட்சி ஆளுமை என்பவை உலகை அப்பக்கம் இழுத்து வைத்திருக்கிறது. உலக நாடுகள் பலவற்றின் தலைவர்கள் இந்த மாதம் 19ம் திகதி இடம்பெறும் அவரது இறுதி மரியாதை நிகழ்வில் பங்குபற்ற லண்டன் சென்றுள்ளனர். 

எனினும், ஒரு விடயத்தை கூர்ந்து கவனிக்க வைக்கும் வகையில் இலங்கைத் தமிழர் சமூகம் செயலில் காட்டியுள்ளது. இலங்கையிலுள்ள தமிழ்த் தேசியம் சார்ந்த அரசியல் கட்சிகளும் அதன் தலைமைகளும் எலிசபெத் அரசியின் மறைவுக்கு இதனை எழுதும்வரை அஞ்சலி அறிக்கைகளை வெளியிடவில்லை. இந்த மறைவை தெரியாதது போலவே நடைமுறையில் காட்டி வருகின்றனர். 

இலங்கையில் தமிழர் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கள அரசாட்சியின் கீழ் உரிமைகளை பறிகொடுத்து வாழ்வதற்கும், தங்களது பிறப்புரிமைச் சுதந்திரத்துக்காகப் போராடி வருவதற்கும் பிரித்தானியா இலங்கைக்கு சுதந்திரம் என்ற பெயரில் வழங்கிய அரசியலமைப்பே காரணம் என்ற தார்மீக கோபமே இதற்கான அடிப்படை என்பதை இலகுவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

இதே நாட்களில், தமிழினத்தின் பாதுகாப்புக்காகவும் உரிமைகளுக்காகவும் நீராகாரம் கூட அருந்தாது உயிர்க்கொடை வழங்கிய திலீபனின் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக இணைந்து கொண்டுள்ளது. 

தெற்கு அரசியலின் நிலைமாறு காலம் தந்துள்ள சிறு இடைவெளி, இந்த வருடம் திலீபனின் நினைவேந்தலை நெருக்குவாரமின்றி பொதுவெளியில் நிகழ்த்த இடமளித்துள்ளது. இதனால் தமிழர் தாயகமெங்கும் வணக்க நிகழ்வுகளும் மலரஞ்சலிகளும் பேரணிகளும் இடம்பெறுகின்றன. 

சிங்கள அரசியல் தலைமை கண்டும் காணாதது போன்று நினைவேந்தலுக்கு அமைதி காத்து வருகின்றதாயினும், தமிழர் தரப்புகள் தமக்குள்ளே மோதிக்கொள்ளும் அசாதாரண சூழலை காணமுடிகிறது. திலீபனின் நினைவேந்தலில் அரசியல் பேசக்கூடாது என்ற கேள்வி எழும்பியுள்ளது. திலீபன் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளராக இருந்தவர். அதன் வழியாகவே சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்டு சரித்திர நாயகனானவர். இவரது நினைவேந்தலில் அரசியல் பேசக்கூடாதென்றால், வேறெங்கு அரசியல் பேசுவது என்ற கேள்விக்குப் பதில் தேட வேண்டியுள்ளது. இதற்கான பதிலுக்கு சிலவேளை காத்திருக்க வேண்டி நேரிடலாம்.

இலங்கை மக்கள் அனைவரையும் அடுத்த மாதம் முதல் வாரம் வரையான காலம் ஜெனிவா தம்பக்கம் வைத்திருக்கும். 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுற்றதாக இலங்கை அரசு அறிவித்த அடுத்த வாரத்தில் ஆரம்பமான சர்வதேசத்தின் வகிபாகம், இன்றுவரை முடிவு காணாது இழுபட்டுக் கொண்டே  போகிறது. அப்போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகமாக இருந்த பான் கீ மூன் நேரடியாக வன்னி சென்று களநிலைமையை ஆராய்ந்து முகாம்களில் அடைபட்டிருந்த மக்களைச் சந்தித்தார். மே 26ம் திகதி அவரும் அப்போது ஜனாதிபதியாகவிருந்த மகிந்த ராஜபக்சவும் இது தொடர்பாக இணைந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். 

இந்த அறிக்கையின் முக்கிய பகுதி பின்வருமாறு அமைந்தது. ‚சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்ட மீறல் தொடர்பான பொறுப்புக்கூறுவது தொடர்பான நடவடிக்கைக்கு இலங்கை அரசு இணக்கம் தெரிவித்தது“. (ளுசi டுயமெயn பழஎநசnஅநவெ யபசநந வழ வயமந அநயளரசநள ழn யஉஉழரவெயடிடைவைல கழச எழைடயவழைளெ ழக ஐவெநசயெவழையெட hரஅயnவையசயைn யனெ hரஅயn சiபாவள டயற).

பான் கீ மூனும் மகிந்தவும் தங்கள் பதவிகளிலிருந்து போய் பல வருடங்களாகியும் இணைஅறிக்கை அமலாக்கப்படவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்; இலங்கை மீதான 19வது இலக்கத் தீர்மானம் 47 உறுப்பினர்களில் 24 பேரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பெற்றது. 

இதன் பின்னர் 2015ம் ஆண்டு மார்ச் மாதம் 46:1 இலக்கத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனவாயினும் எதுவுமே முன்னோக்கி நகரவில்லை. இதில் 30:1 இலக்கத் தீர்மானம் முக்கியமானது. இதற்கு அப்போதைய இலங்கை ஆட்சி பீடம் இணக்கமளித்தது. 2021 மார்ச்சில் 46:1 இலக்கத் தீர்மானத்தை அமெரிக்கா முன்னெடுத்தது. அப்போதிருந்த மைத்திரி-ரணில் அரசு இதற்கு இணைஅனுசரணை வழங்கியது.

நாலரை ஆண்டுகள் மைத்திரி-ரணில் அரசு ஆட்சியில் இருந்தபோதும் தீர்மானத்தைப் பொறுத்தளவில் அது வெறும் தீர்மானமாகவே இருந்தது. எதிர்க்கட்சியாக இருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒவ்வொரு தடவையும் இந்த அரசுக்குச் சாதகமாக காலநீடிப்பை பெற்றுக் கொடுத்தது. பின்னர் ஆட்சிக்கு வந்த கோதபாய இந்தத் தீர்மானத்தை முழுமையாக நிராகரித்ததோடு, ஜெனிவாவுக்கு இடம் கொடுக்க மறுத்து வந்தார். 

இத்தீர்மானத்துக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் முடிந்ததையொட்டிய விபரங்களை இந்த மாத 51வது அமர்வின் ஆரம்ப அறிக்கையில் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் விரிவாகச்; சுட்டியுள்ளது. அத்துடன் மேலதிகமாக பொருளாதார குற்றச்சாட்டையும் இணைத்துள்ளது. புதிதாக நிறைவேற்ற வேண்டிய தீர்மானத்தின் மூலவரைபை ஏழு கூட்டுக் கட்சிகளின் தலைமையிலான பிரித்தானியா வெளியிட்டுள்ளது. 

இதனையொட்டி கிடைக்கப்பெறும் கருத்துகளை மையப்படுத்தி இறுதி அறிக்கை தீர்மானமாக அடுத்த வாரம் பேரவையில் சமர்ப்பிக்கப்படும். வழமைபோல இதற்கும் இலங்கை கால அவகாசம் பெறும். இலங்கை மீதான 46:1 தீர்மானத்தை வலுப்படுத்தும் வகையில் வரவுள்ள தீர்மானத்தை செயற்படுத்த இரண்டு ஆண்டுகள் வழங்க வேண்டுமென்று இச்சந்தர்ப்பத்தில் அமெரிக்க செனட் சபை கோரியுள்ளது. புதிய ஏழு அனுசரணை நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகவிருப்பதால் இரண்டு வருட கால அவகாசம் ஏற்கப்படும் சூழல் நிறையவே உண்டு. 

ராஜபக்ச குடும்பத்தின் மோசமான நிர்வாகம், பொருளாதா சீர்கேடு ஆகியவற்றுக்குள் சவாலாகியிருக்கும் பொருளாதார அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காண சர்வதேச அணுகுமுறை தேவையென்பதால் இந்தக் கால அவகாசத்தை அமெரிக்க செனட் சபை கேட்டுள்ளது. 

புதிய தீர்மானத்தின் முதல் வரைபு தமிழர் தரப்புக்கு நம்பிக்கை ஊட்டவில்லை. இலங்கைக்கு கால அவகாசம் வழங்கி போர்க்குற்றம், பொறுப்புக்கூறல், சர்வதேச கலப்பு நீதிப் பொறிமுறை ஆகியவற்றை நீர்த்துப் போக செய்யுமென்ற அச்சம் தமிழர் தரப்பிடம் உள்ளது. அதே சமயம் இத்தீர்மானத்தை வரவேற்கும் தமிழர் தரப்புகளும் உண்டு. 

இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டு, ராஜபக்சக்களின் ஆட்சிக்கால ஊழல் குற்றச்சாட்டு என்பவை அதிகபட்சத்தில் முன்னைய ஆட்சிகளை நோக்கியது. ஆதலால் இது விடயத்தில் ரணிலின் செயற்பாடுகள் மறைமுகமாக ஜெனிவா பக்கத்துக்கு இருக்கக்கூடும். 

எதுவாக இருப்பினும், இப்போதைய 51வது அமர்வில் நிறைவேற்றப்படும் தீர்மானமானது 53, 54, 55, 57ம் அமர்வுகளுக்கென கால அவகாசம் வழங்கி இலங்கையை மகிழ்ச்சிப்படுத்தக்கூடும். இது விடயத்தில் பின்வரும் அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன: 

‚நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், பொருளாதார நெருக்கடி மற்றும் மனித உரிமைகள் தாக்கம் சம்பந்தமாக நிலைமைகள் பற்றிய கண்காணிப்பு அறிக்கையை அதிகரிக்குமாறும், மனித உரிமைகள் பேரவையின் 53, 55ம் அமர்வுகளின் பேரவைக்கு வாய் மூலம் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் பேரவை கூறுகின்றது. 54வது அமர்வில் தெரிவிக்கப்படும் விடயங்களை உள்ளடக்கி 57வது அமர்வில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான விரிவான அறிக்கை உரையாடலுக்கும் விவாதிப்பதற்கும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்“.  இதுவே அதிகபட்சமாக மனித உரிமைகள் பேரவையால் இப்போதைக்கு மேற்கொள்ளக்கூடிய சாத்தியப்படும் நடைமுறை. 

இறுதி வரைபில் இவைகளில் இறுக்கமான மாற்றங்கள் ஏற்கப்படாதவரையில், தற்போதைய 51வது அமர்வு தமிழ் மக்களையோ தமிழ் தலைமைகளையோ நம்ப வைக்கப் போவதில்லை. இரண்டு வருட கால அவகாசம் என்பது சிங்கள தேச அரசியலைப் பொறுத்தளவில் அதற்கு அதிகூடிய வாய்ப்பளிக்கும் காலமாகவே மாறக்கூடும். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert