April 24, 2024

6வது படுகொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பினார் புடின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை படுகொலை செய்ய முயற்சி நடந்ததாகவும், ஆனால் அதிலிருந்து அவர் அதிர்ஷ்டவசமாக தப்பித்தார் என்றும் யூரோ வீக்லி நியூஸில் வெளியான ஒரு செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புடின் சென்ற சொகுசு காரின் இடதுபக்க முன்பகுதி சக்கரத்தின் மீது சில நபர்கள் தாக்கியுள்ளனர். உடனடியாக காரிலிருந்து புகை கிளம்பியதால் அங்கிருந்து காரில் இருந்து புகை வெளியேறிய போதும், கார் விரைவாக பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் கார் நிறுத்தப்பட்டு, புதின் வெளியேற்றப்பட்டார்

புதின் தனது இல்லத்திற்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நடந்ததாக மற்றொரு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக பலரை கைது செய்து விசாரணை நடைபெறுகிறது. ரஷிய அதிபர் விளாடிமிர் புடினை படுகொலை செய்வதற்கான இந்த முயற்சி எப்போது நடந்தது என்று தெரியவில்லை.

முன்னதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புடின், குறைந்தது ஐந்து படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பினார் என்ற தகவலை அவர் 2017இல் பகிரங்கமாக வெளிப்படுத்தினார் என்பது குறிபிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert