April 20, 2024

புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தார் விஜயதாச

புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள் எழுப்பிய கரிசனைகள் குறித்து தீர்வை காண்பதற்காக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச முன்னாள் பிரதம நீதியரசர் அசோக் டி சில்வா தலைமையில் மூவர் கொண்ட குழுவை நியமித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடன் டெலிகொன்பரன்ஸ் முறை மூலம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னர் நீதியமைச்சர் புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள் எழுப்பிய கரிசனைகள் குறித்து தீர்வை காண்பதற்காக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச முன்னாள் பிரதம நீதியரசர் அசோக் டி சில்வா தலைமையில் மூவர் கொண்ட குழுவை நியமித்துள்ளார்.

கனடாவை சேர்ந்த நீதி மற்றும் சமத்துவத்துவத்திற்கான கனடா அமைப்பினருடன்  நீதியமைச்சர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார், அவுஸ்திரேலியா பிரான்ஸ் ஆகிய நாடுகளின் புலம்பெயர் அமைப்புகளுடனும் அமைச்சர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இலங்கையில் குறிப்பிட்ட காலம் தடுத்துவைக்கப்பட்டிருந்த பின்னர்  விடுதலை செய்யப்பட்ட ரோய் சமாதானம் என்பவர் தலைமையிலான கனடா அமைப்புடன் நீதியமைச்சர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்யவேண்டும், வடக்குகிழக்கில் தமிழர்கள் துன்புறுத்தப்படுவதற்கு முடிவு காணவேண்டும் என்ற இரண்டு முக்கிய கோரிக்கைகளை  புலம்பெயர் தமிழர் அமைப்புகள் முன்வைத்துள்ளன.சமூகங்களிற்கு இடையிலான நல்லுறவை வலுப்படுத்தவேண்டும் எனவும் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

புலம்பெயர் சமூகத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதை  உறுதி செய்துள்ள நீதியமைச்சர் அவர்களுடைய கரிசனைகளை கவனமாக செவிமடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் மூவர் அடங்கிய குழுவை நியமித்துள்ளதாகவும் அந்த குழுவை வெள்ளிக்கிழமை சந்தித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்திற்கு தீர்வை காண்பதற்கான பொறுப்பை அடுத்த தலைமுறைக்கு வழங்க கூடாது  துயரங்களிற்கு விரைவில் தீர்வை காண்பதற்கான நாட்டை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளைமேற்கொள்ளவேண்டும் எனவும் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடக்குகிழக்கில் நிலங்களை படையினர் பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள விடயம் குறித்தும் புலம்பெயர் தமிழர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நிலங்களை உரிமையாளர்களிடம் கையளிக்கும்  செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளோம் இது தொடரும் நடவடிக்கை என நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert