März 28, 2024

சர்வகட்சி அரசில்லையா? மொட்டுக்கே அனைத்து அமைச்சும்!

சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்காவிடின் நிலையான அமைச்சரவையினை பொதுஜன பெரமுனவின் 16 உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறு பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது.

சர்வக்கட்சி அரசாங்கத்தின் கொள்கை திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதுவரை முன்வைக்கவில்லை. பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவின் நிகழ்ச்சி நிரலுக்கமைய ஜனாதிபதி செயற்படுகிறார்

சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்காவிடின் உடன் பொதுத்தேர்தலை நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளன .

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளை ஒன்றினைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி தலைமையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றாலும்,அரசாங்கத்தை கொள்கை ரீதியில் அமைப்பதற்கு தீர்க்கமான முடிவுகள் ஏதும் முன்னெடுக்கப்படவில்லை என பிரதான எதிர்க்கட்சிகள் குற்றஞ்சுமத்துகின்றன.

சர்வக்கட்சி அரசாங்கத்தின் வியூகம், செயற்பாட்டு காலம் தொடர்பில் ஜனாதிபதி தெளிவுப்படுத்தாத காரணத்தினால் சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைய போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதன் உண்மை நோக்கத்தை பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ இல்லாதொழித்துள்ளார். சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதாக குறிப்பிட்டுக்கொண்டு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து கால தாமதத்தை ஏற்படுத்தி பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் முயற்சிகள் மாத்திரம் முன்னெடுக்கப்படுகிறது.

சர்வக்கட்சி அரசாங்கத்தின் வியூகம் மற்றும் செயலாற்றுகை காலம் குறித்து ஜனாதிபதி வெளிப்படை தன்மையுடன் எதனையும் குறிப்பிடுவதி;ல்லை.ஆகவே சர்வக்கட்சி அரசாங்கத்தின் தோற்றம் சாத்தியமற்றது என்றே கருத வேண்டும் என பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 10 அரசியல் கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளை ஒன்றினைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்காவிடின் தற்போதைய தற்காலிக அமைச்சரவையினை நிலையான அமைச்சரவையாக நியமித்து,பொதுஜன பெரமுனவின் 16 உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அமைச்சுக்களை வழங்க வேண்டும் என பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது.

அதற்கமைய முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஷ்டன் பிரனாந்து,நாமல் ராஜபக்ஷ,ரோஹித அபேகுணவர்தன, எஸ்.எம்.சந்திரசேன, எஸ்.பி.திஸாநாயக்க, பவித்ரா தேவி வன்னியராட்சி உட்பட 16 பேருக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றில் பொதுஜன பெரமுன பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்டுள்ளதால் சர்வக்கட்சி அரசாங்கத்தில் மொட்டு கட்சிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் குறிப்பிட்ட கருத்திற்கு ஏனைய அரசியல் கட்சிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

சகல கட்சிகளையும் ஒன்றினைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் போதும் ஒரு அரசியல் கட்சிக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கினால்,சர்வக்கட்சி அரசாங்கத்தின் நோக்கம் முரன்பாட்டுக்குள்ளாக்கும் என அரசியல் கட்சி தலைவர்கள் குறிப்பிட்டனர்.

சர்வக்கட்சி அரசாங்கத்தின் கொள்கை திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதுவரை முன்வைக்கவில்லை. பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவின் நிகழ்ச்சி நிரலுக்கமைய ஜனாதிபதி செயற்படுகிறார். சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்காவிடின் உடன் பொதுத்தேர்தலை நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert