Januar 27, 2023

40பேரை தேடுகின்றனர்:3310பேர் கைது!

ஜூலை 9 ஆம் திகதி கோட்டையில் உள்ள ஜனாதிபதியின் மாளிகைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த 40 பேரை அடையாளம் காண்பதற்காக, பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார் 40 பேரின் மற்றுமொரு புகைப்படத்தை இன்று வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே  கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரம் தொடர்பில் நேற்று வரை 3310 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்

இந்தக் குழுவில் இருந்து 1182 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தாகவும் ஏனைய சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அன்றைய தினம் நாடளாவிய ரீதியில் எண்ணூற்றி ஐம்பத்தெட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அந்தச் சம்பவங்கள் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.