April 23, 2024

கோட்டாபாயவை சிங்கப்பூரில் கைது செய்யுமாறு மனித உரிமைகள் குழு கோரிக்கை

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவை கைது செய்யுமாறு சிங்கப்பூரில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் (The International Truth and Justice Project) சட்டத்தரணிகளால் குற்றிவியல் முறைப்பாடு செய்யப்பட்டது.

2009 ஆம் ஆண்டில் பாதுகாப்புச் செயலாக இருந்த கோட்டாபாயவினால் உள்நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின்போது ஜெனீவா ஒப்பந்தங்களை கடுமையாக மீறினார் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்ட அமைப்பு உலகளாவிய அதிகார வரம்பின் அடிப்படையில் சிங்கப்பூரில் வழக்குத் தொடரக்கூடிய 63 பக்கங்களைக்கொண்ட குற்றவியல் ஆவண கடித்தைத் சமர்ப்பித்தது.

அதில் உள்நாட்டு யுத்தத்தின்போது ஜெனீவா உடன்படிக்கைகளையும் சர்வதேச மனிதாபினா சட்டத்தையும், சர்வதேச குற்றவியல் சட்டத்தையும் கோட்டாபாய ராஜபக்ச கடுமையாக மீறினார் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொய்ட்டர்ஸின் கேள்விகளுக்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல் அலுவலக செய்தித் தொடர்பாளர். ஜூலை 23 அன்று  சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்ட அமைப்பிடமிருந்து ஒரு கடிதம் கிடைத்ததாகக் கூறினார். இந்த விவகாரம் குறித்து எங்களால் மேலும் கருத்து தெரிவிக்க முடியாது என செய்தி தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert