April 20, 2024

இடைக்கால அமைச்சரவையில் சிவியும்?

கோத்தபாய-ரணிலற்ற சர்வகட்சி அரசாங்கத்தில் முன்னாள் வடமாகாண முலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் பங்கெடுப்பாராவென்ற கேள்வி தெற்கு அரசியல் பரப்பில் தோன்றியுள்ளது.

சர்வகட்சி அரசை அமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர்கள் நேற்று (05) பாராளுமன்றத்தில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் ஆலோசகர்களைக் கொண்ட குழுவொன்றை நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தலைமையிலான குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதில் எதிர்க்கட்சிகளும், அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய சுயேச்சை எம்.பி.க்கள் குழுக்களும் கலந்து கொண்டனர்.

முன்னதாக சர்வ கட்சி அரசினில் இணைவது தொடர்பில் பச்சைக்கொடியை சி.வி.விக்;கினேஸ்வரன் காண்பித்ததுடன் நேற்றைய கூட்டத்திலும் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடதக்கது. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert