வாயை மூடி பேசாதிருக்கவும்!

கொலை மிரட்டலையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்திருந்த இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி. பெர்டினண்டோ கோப் குழுவில் நாளை மறுதினம் மீண்டும் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற கோப் குழு கூட்டத்தின்போது, முன்னிலையாகியிருந்த இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி பெர்டினண்டோ, மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை அதானி குழுமத்திற்கு வழங்குமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழுத்தம் பிரயோகித்திருந்ததாக தெரிவித்திருந்தார்.

அதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மறுப்பு தெரிவித்திருந்ததன் பின்னர், இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர், கோப் குழுவின் தலைவர் சரித்த ஹேரத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.

கோப் குழுவில் வினவப்பட்ட கேள்விகளால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தாம் இந்தியப் பிரதமர் தொடர்பான கருத்தை வெளியிட்டதாகவும், அதனை மீளப் பெறுவதாகவும் இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி பெர்டினண்டோ குறித்த கடிதத்தில், சுட்டிக்காட்டியிருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியின் கடந்த 13 ஆம்திகதி இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியிலிருந்து எம்.எம்.சி. பெர்டினண்டோ விலகியிருந்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert