März 28, 2024

வடக்கில் பாடசாலை அதிபர்கள் கடனில்!

இலங்கை அரசாங்கம் ஆரம்பப் பாடசாலைக்கு வழங்கிய மதியநேர உணவுக்கான நிதியை கடந்த 5 மாதங்களுக்கு மேலாக வழங்கவில்லை என்றும் அந்த நிதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அதிபர்கள் கடைகளில் கடன்களைப் பெற்றிருந்தபோதும் இதுவரை அந்த நிதி வழங்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன்திலீசன் தெரிவித்தார்.

 யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக மதிய நேர உணவை நிறுத்துமாறு அறிவிக்காத நிலையில் நிதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஐந்து ஆறு மாதங்களுக்கு மேலாக கடைகளிலே கடன்களைப் பெற்று உணவுகளை மாணவர்களுக்கு வழங்கியுள்ளார்கள்.

இதனால் அதிபர்கள் பல லட்சங்களை கடனாக பெற்று தற்போது நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் தெரிவித்தார்

இதனிடையே அண்மையில் தென்மராட்சி மீசாலையில் அதிபர் ஒருவர் இத்தகைய கடனால் தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.  

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert