April 25, 2024

தாக்குதல்களை தடுக்காது விடுக்க பணித்தது யார்?

மே 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகை பகுதிகளில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது புலனாய்வு துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் அவரது கைத்தொலைபேசியைக் கைப்பற்றிய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தரவுகளைப் பெற்றுக்கொண்டனர். இதன்படி, உண்மையை அறிந்துகொள்ள சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று தேசபந்து தென்னகோனுக்கு கிடைத்த தொலைபேசி அழைப்புகள் மற்றும் அவருக்கு கிடைத்த தரவுகள் தொடர்பில் அலசப்பட உள்ளது.

தாக்குதல் நடத்தியவர்களைத் தடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்ட போதிலும், அந்த உத்தரவை நிறைவேற்ற வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்  பணிப்புரை விடுத்ததாக தேசபந்து தென்னகோன் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழு சிஐடியினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் கூறிய தகவலைச் சரிபார்க்க தேசபந்துவின் தொலைபேசி அழைப்புகள் மற்றும் அவருக்கு கிடைத்த தரவுகள் பகுப்பாய்வு செய்யப்படுகிறது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert