März 28, 2024

நிலத்தடியில் ஈரானின் ஆளில்லா தாக்குதல் விமானங்கள்! காணொளி வெளியானதில் பரபரப்பு!

ஈரானில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள பதுங்கு குழி தளத்தில் வைத்திருக்கும் உளவு மற்றும் தாக்குதல் நடத்தும் ஆளில்லா விமானங்களும் அதற்கான ஏவுகணைகளும் இருக்கம் காணொளி ஒன்றை ஈரான் வெளியிட்டுள்ளது.

குறைந்தது 100 ஆளில்லா விமானங்கள் ஏவுகணைகளுடன் அணிவகுத்து நிற்கின்றன. ஒரு மலைத்தொடருக்கு அடியில் உள்ள இரகசிய பதுங்கு குழியில் ஏவுகணை வீசும் ஆளில்லா விமானங்கள் நிறைந்த பாரிய நிலத்தடி இராணுவ தளத்தை ஈரான் வெளிப்படுத்தியுள்ளது.

ஈரானிய இராணுவம் அதன் இரகசிய நிலத்தடி தளத்தின் சில விவரங்களை அளித்தது. ஆனால் சரியான இடம் அறிவிக்கவில்லை.

அபாபில்-5 உட்பட 100 ட்ரோன்கள் ஜாக்ரோஸ் மலைகளின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

அந்த ஆளில்லா விமானம் Qaem-9 ஏவுகணைகளுடன் பொருத்தப்பட்டுள்ளது.இது ஈரானில் தயாரிக்கப்பட்ட  அமெரிக்காவின் Hellfire ராக்கெட்டின் பதிப்பாகும்.

ஆளில்லா விமானங்களையும் ஏவுகணைகளையும் பார்வையிட சுரங்க நிலக்கீழ் தளத்தில் அதிகாரிகள் வானத்தைப் பயன்படுத்துகின்றனர்.

ஏமன் ஹவுதி கிளர்ச்சிக் குழு, சிரியா மற்றும் லெபனான் ஹிஸ்புல்லா அமைப்புக்கு தாக்குதல்கள் நடத்த ட்ரோன்களை ஈரான் சப்ளை செய்வதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், ஈரான் இராணுவத்தின் இரகசிய ட்ரோன் கிடங்கின் வீடியோ வெளியாகி கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert