März 28, 2024

நவீன துட்டகெமுனு சுருட்டிய விகாரை!

இலங்கையின் புதிய துட்டகெமுனுவான கோத்தபாய பதவியேற்ற ருவன்வெலிசயாவிலிருந்து பில்லியன் பெறுமதியான சொத்துக்கள் ராஜபக்ச தரப்பினால் களவாடப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

 அநுராதபுரத்தில் அமைந்துள்ள புனித ருவன்வெலி சேயாவிலுள்ள சுடா மாணிக்கம் அகற்றப்பட்டு அதன் மீது கண்ணாடி கல் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் அடிவாரத்தில் இருந்த சுமார் 15 பில்லியன் ரூபா பெறுமதியான மாணிக்க கற்கள் திருடப்பட்டுள்ளதாக கலாநிதி அனுஜா ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், பல சக்திவாய்ந்த நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ஜனாதிபதி உள்ளிட்ட ராஜபக்சர்களே பொறுப்பு கூற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புனித ருவன்வெலி சேயாவில் இடம்பெற்றுள்ள மோசடி காரணமாகவே நாட்டில் இன்று பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மோசடி குறித்து ருவன்வெலி சேயாவின் பிரதான தேரருக்கு தெரியும் எனவும், அவரது வாய் கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து உடனடி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாத வரை நாட்டில் உள்ள பிரச்சினைக்கு ஒரு போதும் தீர்வு காணமுடியாது என அவர் கூறியுள்ளார். இந்த விடயத்திற்கு தீர்வு காணாவிட்டால் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு இலங்கையில் பாரிய  நில நடுக்கம் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நில நடுக்கத்தின் போது விக்டோரியா நீர் தேக்கம் உடைந்து பாதிப்பு ஏற்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert