இனப்படுகொலையே:வடகிழக்கு ஆயர் மன்றம்

வடக்கு – கிழக்கு ஆயர் மன்றம் மே18 நினைவேந்தல் நாளை இனப்படுகொலை நாளாக அனுஸ்டிக்குமாறு மானிடக்குலத்தை மதிக்கும் அனைவரையும் மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளது.

வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் தமிழினப்படுகொலை நாள் தொடர்பில் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மே மாதம், சிறிலங்காவில் முரண்பாடான உணர்வுகளை தோற்றுவித்துக்கொண்டிருக்கின்றது. வடக்கு கிழக்கு தமிழினப் படுகொலையில் இறந்தவர்களை நினைவுறுகையில், தெற்கு போர் வெற்றியைக் கொண்டாடுகின்றது. இறந்தவர்களை நினைவு கூருகின்ற உரிமை நல்லிணக்கத்திற்கும், சமாதானத்திற்கும் அடிப்படையானது என்பது மதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். கடந்த காலங்களில் அடக்குமுறையை பயன்படுத்தி நினைவேந்தலை படைத்துறை நசுக்கி வந்துள்ளது.

இலங்கைச் செய்திகள்