März 28, 2024

இடைக்கால அரசாங்கம் : ஏமாற்றும் நடவடிக்கை!

இலங்கையில் இடைக்கால அரசாங்கம் என்பது ஏமாற்றும் நடவடிக்கை என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்காக மக்களின் போராட்டத்திற்கு எதிர்கட்சி துரோகமிழைக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி  ரணசிங்க பிரேமதாசவின் 29வது நினைவுதின நிகழ்வில் கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இடைக்கால அரசாங்கம் என்பது ஊழல் மோசடி திருட்டு குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடுவதற்காக முன்வைக்கப்பட்ட ஏமாற்று நடவடிக்கை என சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஏமாற்றுமோசடி அரசாங்கத்தில் இணைவதை விட எதிர்கட்சி தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நான் எனக்கான சலுகைகளை பெற தயாரில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும் பிரதமரும் அரசாங்கமும் பதவி விலகவிரும்பாமல் அதிகாரத்தை தக்க வைக்க முயல்கின்றனர் என எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காவிட்டால் எனது எதிர்கட்சி தலைவர் பதவி பறிபோகும் என எச்சரிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert