April 20, 2024

தராகி சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் தராகி சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (29) வடக்கு கிழக்கு பகுதிகளில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.

வவுனியா, 

தராக்கி சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவஞ்சலி  இன்று (29) வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தினால் அனுஷ்டிக்கப்பட்டது.

இந் நினைவுத்தினமானது வவுனியா நகரசபை மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் சு.வரதகுமார் தலைமையில் இடம்பெற்றது.

முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழறிஞர் தமிழருவி த. சிவகுமாரன், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்க தலைவர் இரவீந்திரன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட ஊடகவியலாளர்கள் பலர் இந் நினைவு தினத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தராக்கி சிவராமின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் தீபமேற்றியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தராக்கி சிவராம் தொடர்பான நினைவு பேருரைகளும் இடம்பெற்றிருந்ததுடன், சங்கத்தின் முக்கியஸ்தர் கி. வசந்தரூபனால் நன்றியுரையும் நிகழ்த்தப்பட்டது.

மட்டக்களப்பு, 

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவு தூபியில் தராக்கி சிவராமனின் நினைவேந்தலும் அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு. ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் தராக்கி சிவராமின் 17 வது ஆண்டு நினைவேந்தல் இடம்பெற்றது.

இந்நினைவுத்தினத்தில் கலந்து கொண்டோரினால் ஊடகவியலாளர் சிவராமனின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி சுடர் ஏற்றி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், கே. கருணாகரன், மாநகர முதல்வர் ரி.சரவணபவான், பிரதிமுதல்வர் சத்தியசீலன், முன்னாள் மாகாணசபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார். தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், மற்றும் ஊடகவியலாளர்கள், மதகுருமார்கள் கலந்துகொண்டனர்.

இதில் ”இன்றைய பொருளாதார நெருக்கடியும் இதன் எதிர்கால போக்கும்” என்ற தலைப்பில் சமூக செயற்பாட்டாளர் விஜயகுமார் நவநீதன், “விடுதலைப்பயணத்தில் சிவராமின் ஊடக பங்களிப்பு” எனும் தலைப்பில் மூத்த படைப்பாளர் நா.யோகேந்திரநாதன் , “சமகாலத்தில் தமிழர் கலைவடிவங்கள்” எனும் தலைப்பில் மூத்த ஊடகவியலாளர் இளங்கீரன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.

இந்நினைவு தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் சட்டதரணிகள், இளையோர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.  

முல்லைத்தீவு, 

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவர் தலைமையில் தராக்கி சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவஞ்சலி இன்றையதினம் காலை 09.30 மணியளவில்  இடம்பெற்றது .

மூத்த ஊடகவியலாளர் மாமனிதர் சிவராமின் திருவுருவ படத்துக்கு சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது . அதனை தொடர்ந்து கருத்துரைகள் இடம்பெற்றது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert