April 19, 2024

நான் அடிக்கவில்லை:வியாழேந்திரன்!

மட்டக்களப்பில் ஊடகவியளரை தாக்கிய நபருக்கும் எனக்கும் அலுவலக ரீதியாகவோ கட்சி ரீதியாகவோ எந்த தொடர்பும் இல்லை ‘ என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

இன்று (27) கிரான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய முன்றலில் நடைபெற்ற வாழும் இளைஞர் அமைப்பிற்கு கதிரைகள் மற்றும் கூடாரப் பொருட்க்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை தொடர்பாக உரையாற்றும்போது தெரிவிக்கையில்,100 நகரங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தில் வந்தாறுமூலை சந்தை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களை அபிவிருத்தி செய்கின்றபோது ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பிடம் பிரதேச கிராம அபிவிருத்தி சங்கம் சம்பந்தப்பட்டோருடன் பேசி பிரதேச சபையின் அனுமதியுடன் இக் கட்டிடத்திற்கு பதிலாக மாற்று கட்டிடம் பதிதாக அமைத்து தருவதாக தெரிவித்து நிர்வாக ரீதியான எழுத்து மூல நடவடிக்கைளை பின்பற்றி பிரதேச சபையே இதனை அகற்றியது.

குறித்த பேருந்து தரிப்பிடமானது சந்தைப் பகுதிக்கு முன்னால் இருப்பதால் நகர அபிவிருத்திட்டம் என்பதால் நகரத்தை அபிவிருத்தி செய்யும்போது இதனை அகற்றுவது தொடர்பாக எழுத்து மூலமான ஆவனங்களை பெற்று இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நேற்றைய தினம் (26) எனது ஊடக செயலாளர் அவ்வூரைச் சேர்ந்தவர். அத்துடன் பேருந்து தரிப்பிட நிலையத்திற்குரியவர்களும் அவரது உறவினர். இவ்விடத்தில் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் இருந்துள்ளார்.இதன்போது ஊடகவியராளர் கிராம அபிவிருத்தி சங்க உபதலைவரினால் தாக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு பேசியதுடன் அவரை நேரில் சென்றும் பார்வையிட்டேன்

எனவே தாக்குதல் மேற்கொண்ட குறித்த நபர் எனது கட்சிக்காரரும் அல்ல,அலுவலக உத்தியோகஸ்த்தருமல்ல, எனது உத்தியோகஸ்த்தர்கள் எவரும் அவரை அந்த இடத்திற்கு அழைத்து வரவும் இல்லை.

சில இணையத் தளங்களை பார்த்தால் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் உத்தியோகஸ்த்தரால் ஊடகவியலாளர் கொடூரமாக தாக்கப்பட்டார் என பிரசுரிக்கப்பட்டுள்ளது. யார் அந்த உத்தியோகஸ்த்தர், சம்பந்தமே இல்லை.

கடந்த காலத்தில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டபோது அவர்களுக்கு நியாயம் வேண்டி ஊடகச் சுதந்திரம் வேண்டும் என கோரி தெருத் தெருவாக கவனயீர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டோம். போராட்டங்களை மேற்கொண்டதினால் நீதிமன்ற வழக்குகளை எதிர்நோக்கி வருகின்றேன் ஏம்மைப் பொறுத்தளவில் ஆளும் கட்சியில் இருந்தாலும் சரி எதிர்க்கட்சியில் இருந்தாலும் சரி, பதவியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் எமது மக்களுக்கு பிரச்சினைகள் வரும்போது நாங்கள் எங்கள் மக்கள் நலன் சார்ந்த விடங்களுக்கு குரல் கொடுப்போம் என மேலும் தெரிவித்தார்.

ஜ.பி.சி.தமிழ் பிராந்திய ஊடகவியலாளர் செய்தி சேகரிக்கச் சென்றவேளை தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டிருந்தார். இலட்சுமனன் தேவப்பிரதீபன் (நாராயணன்) என்ற ஊடகவியலாளரே நேற்று காலை (26) தாக்குதலுக்குள்ளாகி செங்கலடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் மேற்கொண்டவர் இதுவரை கைது செய்யப்படவில்லை பொலிசார் சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஊடக அமைப்புக்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் இச் செயற்பாட்டினை கண்டித்து கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert