April 18, 2024

சர்வதேச விண்வெளி மையம் இந்தியா, சீனா மீது விழும்; ரஷியா எச்சரிக்கை

சர்வதேச விண்வெளி மையத்தின் 500 டன் எடைகொண்ட பாகங்கள் இந்தியா, சீனா மீது விழும் என்று ரஷிய விண்வெளித்துறை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. போர் 3-வது நாளாக நீடித்தது. இந்த போரை தொடர்ந்து ரஷியா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால், ரஷியாவின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், ரஷிய விண்வெளித்துறை சார்ந்த நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைவிதித்துள்ளது.

இதற்கிடையில், சர்வதேச விண்வெளி மையத்தின் செயல்பாடுகளில் அமெரிக்கா, ரஷியா முக்கிய பங்கு வகிக்கின்றன. சர்வதேச விண்வெளி மையத்தில் அமெரிக்கா, ரஷியா, கனடா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.

சர்வதேச விண்வெளி மையத்தின் இயக்கத்தை கண்காணிப்பத்து, விண்வெளி மையம் பூமிக்கு மிக அருகில் வராமல் இருப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட முக்கிய பணிகளை ரஷியா மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில், அமெரிக்கா ஒத்துழைப்பு தர மறுக்கும்பட்சத்தில் 500 டன் எடைகொண்ட சர்வதேச விண்வெளி மையம் இந்தியா, சீனா மீது விழும் என்று ரஷிய விண்வெளித்துறை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ரஷிய விண்வெளித்துறை தலைவர் டிமிட்ரி ரோகொசின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்க அதிபரின் புதிய பொருளாதார தடைகள் ரஷிய விண்வெளி திட்டங்கள் உள்பட விண்வெளித்துறையில் பின்னடைவை ஏற்படுத்தும். நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பு தர மறுத்தால், கட்டுப்பாடு இல்லாமல் அமெரிக்கா அல்லது ஐரோப்பா மீது பாகங்களாக விழும் சர்வதேச விண்வெளி நிலையத்தை யார் காப்பாற்றுவது?.

500 டன் எடைகொண்ட சர்வதேச விண்வெளி மையத்தின் பகுதி இந்தியா மற்றும் சீனா மீது விழ வாய்ப்பு உள்ளது. நீங்கள் அவர்களை இவ்வாறு மிரட்ட விரும்புகிறீர்களா? சர்வதேச விண்வெளி மையம் ரஷியாவுக்கு மேல் பறக்கவில்லை. ஆகையால் அனைத்து ஆபத்துகளும் உங்களுக்குதான். நீங்கள் அதற்கு தயாராக இருக்கிறீர்களா? சர்வதேச விண்வெளி மையத்துடனான எங்களில் ஒத்துழைப்பை அழிக்க விரும்புகிறீர்களா?’ என தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert