April 23, 2024

துயர் பகிர்தல் ராஜா தியேட்டர் உரிமையாளர் STR என்ற சி.தியாகராஜா

யாழ்ப்பாணம் ராஜா தியேட்டர் உரிமையாளர் STR என்ற சி.தியாகராஜா காலமானார்.

ராஜா சினிமா- யாழ்ப்பாணம், வசந்தி சினிமா- வவுனியா, அமுதா சினிமா- வவுனியா, சரஸ்வதி சினிமா- திருகோணமலை, சுகந்தி சினிமா- மட்டக்களப்பு,சாந்தி சினிமா மட்டக்களப்பு ஆகிய வடக்கு -கிழக்கின் முன்னணி திரையரங்குகளின் உரிமையாளர் ஆவார்.

யாழ்பாண கல்லூரி மாணவர்களுக்கு நல்ல படங்களை தந்தவர்

பல விடுதலை இயக்கங்களின் ஆயுத அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் பயணித்தவர் . யாழ் இந்து கல்லூரி மற்றும் நல்லூர் கந்தன் என்றால் ஆன்மீகம் கல்வி என அள்ளி கொடுத்த கொடை வள்ளல்.