April 20, 2024

ராய் புயல் இதுவைர 208 பேரை பலியெடுத்துள்ளது!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய மற்றும் தென்கிழக்கு தீவு மாகாணங்களை சூப்பர் டைஃபூன் என்று அழைக்கப்படும் ராய்ப் புயல் கடுமையாகத்

தாக்கியதில் குறைந்தது 208 பேர் கொல்லப்பட்டதாகவும், 52 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 239 பேர் காயமடைந்துள்ளதாகவும் இன்று திங்கட்கிழமை தேசிய காவல்துறை அறிவித்துள்ளது.300,000 க்கும் மேற்பட்ட மக்கள் முன்கூட்டியே பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டதால் பல உயிர்களைக் காப்பாற்றப்பட்டிருக்கிறன.

நாட்டின் தென்கிழக்கு கடற்கரையை கடந்த வியாழக்கிழமை அன்று சூறாவளி தாக்கியது. ஆனால் மூன்று நாட்களுக்குப் பிறகும் உயிரிழப்புகள் மற்றும் அழிவுகளின் அளவு தெளிவாகத் தெரியவில்லை. மேலும் முழு மாகாணங்களும் இன்னும் மின்சாரம் மற்றும் செல்பேசி, தொலைபேசி இணைப்பு இல்லாமல் உள்ளன.

குறிப்பாக தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டமை,  மின் தடைகள் மற்றும் அடைபட்ட சாலைகள் போன்ற காரணங்களால் பல நகரங்கள் மற்றும் கிராமங்கள் அணுக முடியாத நிலையில் இருப்பதால் இழப்புக்கள் குறித்த தகவல்களை முழுமையாப் பெறமுடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.