März 28, 2024

13வது உதவாதது! ஏற்றுக்கொள்ள முடியாது – சுமந்திரன்

13 ஆவது திருத்தச் சட்டம் அடிப்படையில் பழுதுகள் நிறைந்தது என்பதை தென்னிலங்கை தலைவர்களே ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் அதனை தீர்வாக எம்மால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழரசுக் கட்சி மக்களிடத்தில் சமஷ்டி தீர்வுக்காக பெற்றுக் கொண்ட ஆணையை மீறிச் செயற்படாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை சிதைந்து போகிற தமிழ்த் தேசியமும் சிந்திக்காத தலைமைகளும் எனும் தலைப்பில் கருத்துப்பகிர்வுறவாடல் நிகழ்வு யாழ் கலைத்தூது மண்டபத்தில் நடைபெற்றது.

இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்,

அவர் மேலும் தெரிவிக்கையில்,

1949 ஆம் ஆண்டு இலங்கை தமிழரசுக் கட்சி உருவாக்கப்பட்ட போது தமிழ் மக்களுக்கான கொள்கை நிலைப்பாடு முதன் முதலாக ஏற்படுத்தப்பட்டது. இதன் போது தந்தை செல்வா ஆற்றிய உரையானது பின்னர் 1951 ஆம் ஆண்டு திருகோணமலை மாநாட்டில் கட்சித் தீர்மானமாக அறிவிக்கப்பட்டது.

அன்றிலிருந்து தமிழரசுக் கட்சி அந் நிலைப்பாட்டிலேயே தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டிருக்கின்றது. எமது நிலைப்பாட்டிற்கான மக்களின் ஆதரவும் ஆணையும் தற்போது வரையில் காணப்படுகின்றது.

அதாவது, சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வுடனான தீர்வு என்பதே எம்முடையதும் மக்களுடையதும் நிலைப்பாடாகும். போரின் பின்னர் 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையில் மக்கள் முன்னிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இக் கொள்கையை முன்வைத்து அனைத்து தேர்தல்களிலும் ஆணை பெற்று வந்திருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பல கட்சிகள் அங்கம் வகித்துள்ளன. வெவ்வேறு காலப்பகுதியில் அவை உள்வருவதும் வெளிச்செல்வதுமாக இருந்துள்ளன. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி கட்டமைப்பிலான அதிகாரப் பகிர்வுடனான தீர்வு என்ற விடயத்தில் மாற்றுக் கருத்துக்களை கொண்டிருக்கவில்லை.

கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளும் இதனை ஏற்றுக் கொண்டு மக்கள் முன்னிலையில் வெளிப்படுத்தி அவர்களின் ஆணையைப் பெற்றுள்ளன. கூட்டமைப்பிற்கு வெளியில் இருக்கின்ற கஜேந்திரகுமார் தரப்புரூபவ் விக்னேஸ்வரன் தரப்பு ஆகியனவும் இக் கோரிக்கையையே முன்வைத்து ஆணை பெற்றுள்ளன.

அவ்வாறிருக்க தற்போது தமிழ் பேநும் தரப்புக்களாக ஒன்றுகூடி 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுலாக்குமாறு கோருவதற்கு முயற்சிக்கப்படுறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சி இந்த விடயத்தை முன்னெடுகின்றது. அந்தக் கட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணை 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கானதல்ல. அப்படியிருக்கும்போது எவ்வாறு அக்கட்சி இந்த விடயத்தை முன்னெடுக்கலாம் அது மக்களின் ஆணைக்கு மாறானதாகும்.

சுமஷ்டிதான் இறுதி தீர்வு என அக்கட்சியினர் குறிப்பிட்டாலும் தற்போது தமிழ் பேசும் கட்சிகள் கையொப்பமிடுவதற்காக தயாரிக்கும் வரைவில் 13 ஐ அமுல்படுத்துதல் என்றே தலைப்பிடப்பட்டுள்ளது. நான் அந்த வரைபை பார்வையிட்டுள்ளேன். தமிழரசுக் கட்சி இந்த நிலைப்பாட்டுக்கு செல்ல முடியாது. ஆகவேரூபவ் எமது நிலைபாடு என்ன என்பதை 21 ஆம் திகதி வெளிப்படுத்துவோம். 1997 ஆம் ஆண்டு இராணி சட்டத்தரணி நவரட்ணராஜாவின் நிவைவுரையில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் 13 ஆவது திருத்தச் சட்டம் அடிப்படையிலேயே பழுதுபட்டது. அதனை திருத்தமுடியாது என்று கூறிவிட்டார்.

அதே நேரம் தற்போது அட்சியிலுள்ள ராஜபக்ஷ தரப்பினர்தான் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அர்த்தமுள்ளதாக மாற்றி முழுமையாக அமுல்படுத்துவதோடு அதற்கு அப்பால் செல்வோம் என்று நான்கு தடவைகள் வாக்குறுதி அளித்துள்ளனர். நாங்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையோ முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கையோ சந்திதத்த போது 13 ஐ வலியுறுத்தவில்லை. அப்படியிருக்கையில் வாக்குறுதியளித்த ராஜபக்ஷக்கள் வேண்டுமானால் 13 ஆம் திருத்தச்சட்டத்தை அர்த்தமுள்ளதாக மாற்றி அமுலாக்கட்டும். அது அவர்கள் சம்பந்தப்பட்ட விடயமாகும்.

நாங்கள் வலிந்துபோய் அடிப்படையில் பழுதான திருத்தமுடியாத 13 ஆவது சட்டத்தை அமுலாக்கவேண்டிய தேவை கிடையாது. பிறிதொரு நிகழ்ச்சி நிரலில் 13 ஐ அமுல்படுத்தும் சில தரப்புக்களின் செயற்பாட்டிற்கு ஆதரவினை வழங்க முடியாது. தமிழரசுக் கட்சி இந்த விடயத்தில் உறுதியாக உள்ளது என்றார்.