April 24, 2024

வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களை மூடும் சிறிலங்கா அரசாங்கம்

நாணயக் கட்டுப்பாட்டின் கீழ் வெளிநாடுகளில் இயங்கி வரும் இரண்டு தூதரகங்கள் மற்றும் இரண்டு துணைத் தூதரகங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வெளிநாட்டுச் சேவைக்கான செலவினங்களைக் குறைப்பதன் மூலம் அரசாங்க செலவினங்களைக் குறைக்கும் நடவடிக்கையாக இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

நைஜீரியாவில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் ஜேர்மனி மற்றும் சைப்ரஸில் உள்ள இரண்டு துணை தூதரகங்களையும் மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பல தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களை மூடுவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. மூடப்பட்ட தூதரகங்களை அண்டை நாடுகளில் உள்ள தூதரகங்களிடம் ஒப்படைத்து அந்தந்த நாடுகளுடன் உறவைப் பேணவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தூதரகங்கள் மூடப்படுவதை உறுதி செய்துள்ளார். 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளின்படி இலங்கையின் வெளிநாட்டு வதிவிடப் பணிகளைப் பராமரிப்பதற்கான செலவு ரூ. 11 பில்லியன் ஆகும்.