April 19, 2024

துணை ஆயுதக்குழு: கண்டறிய புதிய அரசு ஆணைக்குழு

துணை ஆயுதக்குழுக்களில் இருந்து காணாமல் போனோரை கண்டறிய புதிய அரசு ஆணைக்குழு அமைத்துள்ளது.இந்நிலையில் அவ்வாறு அமைக்கப்பட்ட கோத்தபாயவின் ஜனாதிபதி விசாரணை  ஆணைக்குழுவின் கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட தரப்புக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த கலந்துரையாடலில் 43 நபர்கள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்களான உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஓய்வு பெற்ற பொலிஸ் மா அதிபர் சந்திரா பெனாண்டோ, ஓய்வு பெற்ற மாவட்டச் செயலாளர் நிமல் அபேசிறி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாநகர சபை உறுப்பினர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியவர்கள் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுடைய கருத்துக்களை கேட்டறிந்தனர்.

குறிப்பாக துணை ஆயுதக்குழு உறுப்பினர்களில் காணாமல் போனோரை தேடவே முயற்சிகள் நடந்துள்ளன.