April 19, 2024

கரை ஒதுங்கும் உடலங்கள் காணாமல் ஆக்கப்பட்டோருடையதா?

யாழ். மாவட்ட கடற்கரைகளில் கரையோதுங்கும் நிலையில் இதுவரை தகவல்கள் வெளியாக நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சங்கள் தோன்றியுள்ளன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரமேசந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,யாழ்ப்பாண கரையோரங்களில் கடந்த வாரம் ஆறு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. இது தொடர்பில் எந்த விதமான தகவல்களும் வெளிவரவில்லை.

அதனால்காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்கள் வெளிவராத நிலையில் இந்த சடலங்கள் கரை ஒதுங்குகின்றன.

கடற்கரைகளில் சடலங்கள் ஒதுங்கி வருகின்றன எனில்  கடலில் விபத்துக்கள் நடைபெற்று இருக்க வேண்டும். ஒன்றில் இலங்கை மீனவர்கள், அல்லது இந்திய மீனவர்களினது மீன் பிடி படகுகள் விபத்துக்கு உள்ளாகி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு விபத்துக்கள் நடைபெற்றதாக தகவல் இல்லை.

இதனால் காணாமல் போனவர்களின் உறவுகள் அச்சத்தில் உள்ளனர். ஆனால் அரசாங்கம் எந்த விசாரணைகளையும் முன்னெ டுக்கவில்லை.

மக்களுக்கு விபரங்களை விரைந்து கொடுக்க வேண்டும். பொலிஸ், கடற்படை மீது அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே பொலிஸார் மற்றும் கடற்படை ஆகியவை இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை தீவிரப்படுத்தி, அதன் உண்மை தன்மைகளை விபரங்களை விரைவாக வெளிப்படுத்த வேண்டும் என கோரினார்.