குத்தகைக்கு வெலிக்கடை சிறை!!

வெலிக்கடை சிறைச்சாலையின் 42 ஏக்கர் காணியை கலப்பு அபிவிருத்தி திட்டத்துக்காக நீண்டகால அடிப்படையில் குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.கலப்பு அபிவிருத்தி திட்டத்திற்காக நீண்ட கால அடிப்படையில் காணிகளை குத்தகைக்கு வழங்குவதன் மூலம் சுமார் 2,630 கோடி ரூபாவை பெறுவதற்கு மதிப்பிடப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையை அதன் இடத்தில் இருந்து அகற்றி, ஹொரணை, மில்லனிய பிரதேசத்தில் 280 ஏக்கர் காணியில் கட்டுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

பத்தரமுல்லையில் சிறைச்சாலை தலைமையகமும் மாலபேயில் உத்தியோகபூர்வ குடியிருப்பும் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று திட்டங்களுக்கான செலவையும் வெலிக்கடை சிறைச்சாலை அமைந்துள்ள காணியின் குத்தகையில் இருந்து ஈடுகட்டவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையை ஹொரணையில் உள்ள மில்லனியவுக்கு இடமாற்றம் செய்வதற்கும், பத்தரமுல்லையில் தலைமையகத்தை நிர்மாணிப்பதற்கும் மாலபேயில் உத்தியோகபூர்வ குடியிருப்புகளை நிர்மாணிப்பதற்கும் காணிகளை சுவீகரிப்பதற்கும் சுமார் 3147 கோடி ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

tamilan

Next Post

கரன்னாகொடவை காப்பாற்ற காலக்கெடு!

So Dez 5 , 2021
கப்பம் கோரி   கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை  காணாமலாக்கிய  சம்பவத்தில், முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 கடற்படையினருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க  சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ற நீதிபதிகள் குழாம்  தீர்மானித்தது. இந்த வழக்கு நேற்று சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ரில் விசாரணைக்கு வந்த போது,  முன்னாள் கடற்படை […]

Breaking News

Categories