உக்கிரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்பு!! புதினுடன் பேசத் தயார்!! பைடன்

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் கடந்த 300 வருடங்களாக இருந்த உக்ரைன் கடந்த 1991ம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் துண்டுகளாக உடைந்த பின்பு, விடுதலை பெற்று தனி நாடாக மாறியது.  கடந்த 2014ம் ஆண்டில் உக்ரைனின் கிரீமியா தீபகற்பம் மீண்டும் ரஷ்யா வசம் சென்றது. இதனை தொடர்ந்து நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் உக்ரைனை சேர்க்க அமெரிக்கா முயற்சித்தது.இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  உக்ரைன் மீது படை எடுக்க 1.75 லட்சம் ராணுவ வீரர்களை எல்லை பகுதியில் ரஷ்யா நிலை நிறுத்தி உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைனிற்கு உதவ, அங்கு ஏவுகணைகள் மற்றும் ராணுவ வீரர்களை நேட்டோ கூட்டமைப்பு நிலை நிறுத்தினால், கடுமையான எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று புதின் கடந்த சில நாட்களுக்கு முன்பு எச்சரித்தார்.  உக்ரைன் மீது ரஷ்யா படை எடுக்காமல் தடுக்க, புதினுடன் நீண்ட விவாதம் ஒன்றை நடத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார்

tamilan

Next Post

ஒரே தள்ளுமுள்ளு!

So Dez 5 , 2021
நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவம் தொடர்பான சகல தகவல்களையும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார  இன்று நாடாளுமன்ற அவைக்கு தெரியப்படுத்தியுள்ளார். அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) தன்னை கெட்ட வார்த்தைகளால் திட்டியதாகவும் ராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது சட்டையை பிடித்து இழுத்தார் எனவும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய மனுஷ நாணயக்கார,கௌரவ சபாநாயகர் அவர்களே நேற்றைய தினம் நேரம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டது. ஏனைய […]

Breaking News

Categories