April 24, 2024

ஒமிக்ரான் வைரசுக்கு தடுப்பூசி தயார்: உலக நாடுகளுக்கு ரஷ்யா நம்பிக்கை

உருமாறிய நிலையில் கொரோனா வைரஸ் தொற்றான ‘ஒமிக்ரான்’ தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தொற்று கொரோனா வைரஸைவிட மிகவும் ஆபத்தை விளைவிக்கும் என விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் மூலமாக தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. இருந்தாலும் ஒமிக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் உருவாகி பெல்ஜியம், இஸ்ரேல், ஹாங்காங் என்று பரவத்தொடங்கி விட்டது. இந்த வகையான வைரஸ் தொற்று கொரோனாவில் இருந்து மீண்டவர்களை தாக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு தடுப்பு மருந்து எப்படி தயார் செய்வது என உலக நாடுகள் தலையை பிய்த்துக்கொண்டிருந்தது.

இந்நிலையில், ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகள் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று ரஷ்ய சுகாதாரத்துறை தற்போது நம்பிக்கையான தகவலை தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் கருத்து கூறிய ரஷ்ய சுகாதாரத்துறை, ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகள் ஒமைக்ரான் கொரோனா வகையிலான வைரஸை முற்றிலும் அழிக்கும் வல்லமை கொண்டது. எனவே தேவையான அளவு தடுப்பூசிகள் உலக நாடுகளுக்கு வழங்கவும் தயார் என கூறியுள்ளது.