März 29, 2024

பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனத்துடன் 41 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு

email sharing button
sharethis sharing button

அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிகள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

நிரந்தர நியமனம் வழங்கப்படுவோருக்கு மாதாந்தம் 41 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.