März 28, 2024

மாவீரர்நாளை குழப்ப முனையும் தீயசக்திகள்.

30 வருடங்களுக்கு மேலான தமிழீழத்தேசியத்தலைவரின் வழிகாட்டலில் தமிழீழ விடுதலைக்கான போராட்டத்திற்கு முதுகெலும்பாக இருக்கவேண்டும் என்பதற்காக தேசியத்தலைவரின் தீர்க்க தரிசனத்தில் உருவாக்கப்பட்டதுதான் அனைத்துலகக்கட்டமைப்பு இக்கட்டமைப்பானது தமிழீழத்தேசியத்தலைவரின் சிந்தனையின் செயல்வீச்சாக சர்வதேச நாடுகளில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளது என்பது வரலாறு, 2009 ஆம் ஆண்டு வரைக்கும் தமிழீழதேசத்தின் அனைத்து செயற்பாடுகளுக்கும் பொருளாதார ரீதியில் அச்சாணியாக இயங்கியது ம் வரலாறு .

ஏன் 2009 இற்கு பிற்பாடும் கொண்ட கொள்கையில் விலகாது மக்களின் பங்களிப்போடு பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மாவீரர் குடும்பங்களுக்கும் மனிதநேய பணிகளை செய்து வருகின்றதோடு தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கான போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.

ஆனால் தேசியத்தலைவரால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை சிதைத்து மக்களுக்கான போராட்ட இயங்குசக்தியை அழிப்பதற்காக எம்மை அழித்த சக்திகள் தொடர்ச்சியாக தங்கள் முயற்சிகளை மேற்க் கொண்டு வருகின்றார்கள். அவர்களின் இந்த முயற்சிக்கு தேசியத்தலைவரின் பெயரையும் மாவீரரின் ஈகத்தையும் மக்களின் வலிகளையும் பயன்படுத்தி முன்னாள் போராளிகள் என்றும் இன்னாள் போராளிகளென்றும் புகழ்ச்சி பதவிகளை விரும்புகின்ற விசமிகளை களத்திலே இறக்கி இரண்டு மாவீரர்நாள் செய்வதிலும் கட்டமைப்புகளில் நீண்டகாலமாக பணியாற்றும் செயற்பாட்டாளர்களை உளவியல் ரீதியாக உடைத்தெறிந்து அந்நிய சக்திகளின் ஆசைகளை நிறைவேற்ற துடிக்கும் இந்த முடக்கழுதைகளை எந்த காரணத்திற்காவும் மக்கள் அனுமதிக்காது வரலாற்று ரீதியாக தேசியத்தலைவரால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை பாதுகாக்க கவசங்களாக இருக்கவேண்டும் என்பதே காலத்தின் தேவையாக இருக்கின்றது.

காரணம் வழமையாக தேசியத்தலைவரின் கட்டமைப்புகளால் முன்னெடுக்கப்படும் மாவீரர்நாள் ஒழுங்குகளை குலைப்பதற்கான எதிரின் ஏவல் வேலைகளை செய்வதற்கான வேலைகளில் ஒருசில நாடுகளில் நான்தான் இயக்கமென்று இவ்வாண்டும் கிளம்பியுள்ளார்கள் இவர்கள் யார் ஏன்? இதை செய்ய முற்படுகின்றார்கள் என்ற உண்மை நிலையை தமிழ்முரசம் வானொலி   ஆராய்ந்து வருவதோடு விரைவில் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த தயாராகி வருகின்றது.

காரணம் எந்த சூழ்நிலையிலும் தேசியத்தலைவரால் உருவாக்கப்பட்ட அமைப்புகளை அழிப்பதற்கான இழிய வேலைகளில் ஈடுபடும்  துரோகத்தனங்களை அனுமதிக்க முடியாது. அதுவும் புலம்பெயர்ந்த நாடுகளின் நீதிமன்றங்கள் வரைக்கும் மாவீரர்நாள் நிகழ்வுகளை இழுத்துச்செல்வதை இழுக்காவே பார்க்க முடிகிறது.

-நன்றி

தமிழ்முரசம்