April 20, 2024

சுமா, டக்கி மற்றும் அங்கயன் கூட்டு தோல்வி!

ஏம்.ஏ.சுமந்திரன் ,டக்ளஸ் மற்றும் அங்கயன் கூட்டில் ஆட்சி கதிரையேறிய சுயேட்சைக்குழு வல்வெட்டித்துறை நகரசபையின் வரவு செலவு திட்டத்தில் தோல்வியடைந்துள்ளது.

இன்றைய தினம் சுயேட்சைக்குழு தவிசாளர் செல்வேந்திரா தலைமையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

ஆதரவாக எட்டு வாக்குகளும் எதிராக ஒன்பது வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தது.

கூட்டமைப்பு மற்றும் தமி;ழ் தேசிய மக்கள் முன்னணி தரப்புக்கள் எதிர்த்து வாக்களித்தமையால் வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அண்மையில் சிறீதர் திரையரங்கு சென்றிருந்த சுயேட்சைக்குழு தவிசாளர் செல்வேந்திரா டக்ளஸின் ஆதரவை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் தவிசாளராக தெரிவானவர் பாதீடு தோற்கடிக்கப்பட்டமையால் , தவிசாளர் பதவியை இழக்கும் நிலைமையில் உள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.
அதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட கே.சதீஸை ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து, சுயேச்சை குழு உறுப்பினரான எஸ்.செல்வேந்திரா புதிய தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்நிலையில் அவர் பதவியேற்று இரண்டு மாத கால பகுதி முடிவுறாத நிலையில் அவரது முதலாவது பாதீடு தோற்கடிக்கப்பட்டுள்ளது. 14 நாளில் மீண்டும் சமர்ப்பிக்கப்படும் பாதீடு தோற்கடிக்கப்பட்டால் , அவர் தனது தவிசாளர் பதவியை இழப்பார். என்பது குறிப்பிடத்தக்கது.