April 20, 2024

நெருக்கடிக்குள் வடகிழக்கு!

 

வடபுலத்தில் தொடரும் அடை மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் ஜயாயித்து 908 குடும்பங்களை சேர்ந்த 19ஆயிரத்து 987 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.

இதனிடையே தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் தோன்றிய தாழமுக்கம் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இத்தாழமுக்கம் எதிர்வரும் 12ம் திகதியன்று இந்தியாவின் தமிழ்நாட்டிலே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் இத்தாழமுக்கத்தின் பாதிப்பு வலயத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகள் உள்ளடக்குகின்றன. எனவே எதிர்வரும் 13ம் திகதி வரை தொடர்ச்சியாக மழை பெய்யவுள்ளது.

எனினும் புதன்கிழமை காலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை எமக்கு அதிகூடிய மழை வீழ்ச்சி மற்றும் பலமான காற்று வீசும் காலமாக கணிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,மன்னார் பாடசாலைகளிற்கு நாளையும் விடுமுறை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் நாளைய தினமும் அது நீடிக்கப்பட்டுள்ளது.