சீனா செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்.!!

சீனா அனுப்பிய SDG-SAT-1 செயற்கைக்கோள் அதன் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு சீனாவில் உள்ள செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து செயற்கைக்கோள் லாங் மார்ச்-6 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோள் விண்வெளியில் சுமார் 515 கிலோ மீட்டர் உயர சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இதில் கிடைக்கும் தரவுகள் மூலம் மனித நகர்ப்புற, குடியிருப்பு மற்றும் கடலோர நடவடிக்கைகள், இயற்கையின் மாற்றங்களை மதிப்பிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.