März 29, 2023

மாகாண சபை , உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை  விரைவாக நடத்தவும் – சஜித் பிரேமதாச

அடுத்தாண்டு ஆரம்பத்தில் நடைபெறவுள்ள மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை எந்த தாமதமும் இன்றி நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
பொத்துவில் வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே  அவர் இதனை தெரிவித்தார்.
இந்தத் தேர்தல்கள் மக்களின் துடிப்பை சரிபார்க்கும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களை உடனடியாக நடத்துவதன் மூலம் , இந்த நாட்டின் மக்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை அரசாங்கம் உட்பட அனைவரும் அறிய முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.