April 19, 2024

கனடா தேர்தல்: ஆட்சியை தக்க வைக்கும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனடாவின் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அக்கட்சி பெரும்பான்மையை பெற முடியவில்லை. இது அவரின் மூன்றாவது தொடர் வெற்றியாகும்.பெரும்பான்மைக்குத் தேவையான 170 இடங்களில் ஜஸ்டினின் லிபரல் கட்சி 148 இடங்களிலும், கனசர்வேட்டிவ்  கட்சி 103  இடங்களிலும்  பிளாக் கியூபெகோயிஸ் 28 இடங்களிலும், இடதுசாரி புதிய ஜனநாயகக் கட்சி  22 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.