März 28, 2024

600 மீற்றர் தூரத்தை கயிற்றில் நடந்து முடித்த நாதன் பவுலின்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கயிற்றில் நடக்கும் பிரபல சகாசக் கலைஞரான நாதன் பவுலின் 70 மீற்றர் உயரத்தில் ஈபிள் கோபுரத்திற்கும் ட்ரோகாடெரோ சதுக்கத்திற்கும் இடையே 600 மீட்டர் தூரத்தை கடந்து மக்களை கூட்டத்தை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.இவர் வெறுமனவே 2.5 சென்றி மீற்றர் அகலமுள்ள ஒரு கயிற்றில் 70 மீற்றர் உயரத்திலிருந்து நடைபயணத்தைத் தொடங்கி 600 மீற்றர் தூரத்தைக் கடந்து ட்ரோகாடெரோ சதுக்கத்திற்கு அருகில் அமைந்த திரையரங்குக் கூரைக்குச் சென்றார்.

இவரது சகாசச் செயலை அங்கிருந்து பார்வையிட்ட மக்கள் கைதட்டி ஆரவாரித்து உற்சாகப்படுத்தினர். குறித்த தூரத்தை அவர் அரை மணி நேரத்தில் கடந்தார். இடையிலே மக்களிடம் இருந்து உற்சாகத்தைப்பெறுவதற்காக கயிற்றில் உட்கார்ந்து, படுத்து, ஒரு கையில் தொங்கி நின்று தனது திறமைகளை வெளிப்படுத்திய பின்னர் அவர் தனது நடையை முடிந்திருந்தார்.

அவர் தனது நடை இலக்கை முடித்தவுடன் கருத்துத் தெரிவிக்கையில்:

ஈபிள் கோபுரத்திலிருந்து நடை தொடங்கியது மிகவும் அழகானது. நான் இந்த நடையை மேற்கொள்ளும் போதும் எதையும் உணரவில்லை. உயரத்தில் நான் இருக்கிறேன் என்பது எனக்கு பயம் இல்லை என்றார்.

ஏற்கனவே 2019 ஆம் ஆண்டில் இவர் 150 மீட்டர் உயரம், 510 மீட்டர் நீளம் கொண்ட இரண்டு  கட்டிடங்களுக்கு இடையே கயிற்றில் நடந்து இலக்கை நிறைவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.