März 29, 2023

இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை செயலாளராக எலிசபெத் ட்ரஸ் நியமனம்!

இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்தவர் டொமினிக் ராப். தற்போது டொமினிக் மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக எலிசபெத் ட்ரஸ் வெளியுறவுத்துறை, காமன்வெல்த், மேம்பாட்டு விவகாரங்களுக்கான செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

40 வயதான ட்ரஸ் இதற்கு முன் சர்வதேச வர்த்தக செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.