März 28, 2024

பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைந்த சீனாவின் 19 போர் விமானங்கள்!! அதிர்ந்து போன பாதுகாப்பு படை

தாய்வான் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் சீன இராணுவ விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக தாய்வான் குறிப்பிட்டுள்ளது.

வான் பாதுகாப்பு அடையாள வலயம் என்று அழைக்கப்படும் பகுதிக்குள் போர் விமானங்கள் மற்றும் அணு திறன் கொண்ட குண்டு வீசும் விமானங்கள் உட்பட 19 விமானங்கள் ஊடுருவியதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சீனாவின் மிகப்பெரிய ஊடுருவலில் ஒன்றாக இது குறிப்பிடப்படுகின்றது.

இதில் அணு குண்டுகளை எடுத்துச் செல்லக் கூடியதும், நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு விமானமாகவும் உள்ள நான்கு எச்-6 குண்டு வீசும் விமானங்களையும் சீனா ஈடுபடுத்தியதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டது.

தாய்வானுக்கு அருகே ஓர் ஆண்டுக்கு மேலா சீன விமானப் படை செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தாய்வான் குற்றம்சாட்டுகிறது. தாய்வானை தமது நாட்டின் பிரிந்து சென்ற ஒரு மாகாணமாகவே சீனா கருதுகிறது. ஆனால் தாய்வான் தம்மை ஓர் இறைமை கொண்ட நாடாக குறிப்பிடுகிறது.

பிரதாஸின் வடகிழக்கில் தாய்வானின் கடற்கரையை விட சீனக் கடற்கரைக்கு நெருக்கமான விமானப் பாதையைக் காட்டும் வரைபடத்தை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டது.

இதன்போது, சீன விமானங்களை எச்சரிப்பதற்காக ஏவுகணை அமைப்புகள் பயன்படுத்தப்பட்டு போர் விமானங்கள் அனுப்பப்பட்டன.

இது தொடர்பில் சீனா இன்னும் அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை.

பெய்ஜிங் இதற்கு முன்னரும் ஜூன் மாதத்தில்இ 28 இராணுவ ஜெட் விமானங்களை தாய்வானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்கு அனுப்பியது.

ஜனவரி 24 அன்று இதேபோன்ற பணியில் 15 விமானங்கள் தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்தன.

அதே நேரத்தில் ஏப்ரல் 12 அன்று தைவான் 25 ஜெட் விமானங்களை அனுப்பியது. இருப்பினும், கடந்த வாரம் தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் சீனாவின் ஆயுதப்படைகள் தைவானின் பாதுகாப்பை ‚முடக்க‘ முடியும் என்றும் சீன அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாகவும் எச்சரித்தது.