April 18, 2024

பன்ஜ்ஷீரை முழுமையாகக் கைப்பற்றியதாக தலிபான்கள் அறிவிப்பு!!

ஆப்கானிஸ்தானில் எதிர்ப்புப் படையினரின் கடைசிப் பகுதியான பஞ்சஜ்ஷிர் மாகாணத்தை தலிபான் முழுமையாகக் கைப்பற்றியுள்ளது என அதன் பேச்சாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறினார்.இன்று திங்கட்கிழமை சமூக ஊடகங்களில் உள்ள படங்கள் தலிபான் உறுப்பினர்கள் பஞ்ச்ஷிர் மாகாண ஆளுநர் வளாகத்தின் வாயிலின் முன் நிற்பதைக் காட்டின.

பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கில் தலிபான் எதிர்ப்புப் படைகளான தேசிய எதிர்ப்பு முன்னணி (NRF) சண்டையிடுவதாக உறுதியளித்தது. NRF அது பள்ளத்தாக்கு முழுவதும் „மூலோபாய நிலைகளில்“ இருப்பதாகக் கூறியது.

தலிபான்கள் மற்றும் அவர்களது பங்காளிகளுக்கு எதிரான போராட்டம் தொடரும்“ என்று கூறியது.

தேசிய எதிர்ப்பு முன்னணி (NRF) கணிசமான போர்க்கள இழப்புகளை அனுபவித்ததை ஒப்புக்கொண்டது மற்றும் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது.

என்ஆர்எஃப் ஒரு அறிக்கையில் „தலிபான்கள் பஞ்ச்ஷிரில் தனது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி அதன் படைகளை திரும்பப் பெற வேண்டும்“ என்று முன்மொழிந்தது.

பதிலுக்கு, நாங்கள் எங்கள் படைகளை இராணுவ நடவடிக்கைகளில் இருந்து விலகுமாறு அறிவுறுத்துகிறோம் என்று அறிக்கை கூறியது.