April 20, 2024

தனியுரிமை விதிகளை மீறியதற்காக வாட்ஸ்அப்பிற்கு துருக்கி அபராதம்!!

தனியுரிமை விதிகளை மீறியதற்காக துருக்கியின் தரவு பாதுகாப்பு ஆணையம் வாட்ஸ்அப்பிற்கு கிட்டத்தட்ட 1,950,000 துருக்கிய லிராவுக்கு (€ 197,000) அபராதம் விதித்துள்ளது.ஃபேஸ்புக்கிற்குச் சொந்தமான மெசேஜிங் தளம் அதன் பயனர்களின் தரவை எவ்வாறு செயலாக்கும் மற்றும் எந்த நோக்கத்திற்காக எனத் தெளிவாகக் கூறப்படவில்லை.

வாட்ஸ்அப்  சட்டத்திற்கு மாறாக தனிப்பட்ட தரவை செயலாக்குவதைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று துருக்கியின் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு ஆணையம் (KVKK) தெரிவித்துள்ளது.

துருக்கியின் சட்டங்களுக்கு ஏற்ப தனது தனியுரிமை கொள்கையை கொண்டு வருமாறு உத்தரவிட்டது.

கடுமையான ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகளை மீறியதற்காக அயர்லாந்தின் தரவு தனியுரிமை கண்காணிப்பகத்தால் வாட்ஸ்அப்பிற்கு 225 மில்லியன் யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

உள்ளூர் சேவையகங்களில் வாட்ஸ்அப் பயனர்களின் தரவைச் சேமிக்கத் தவறியதற்காக ஃபேஸ்புக்கிற்கு ரஷ்ய அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.