März 28, 2024

கொரோனா கால கொள்ளை:விசாரணை பிரதேச செயலர்!

கரவெட்டி பிரதேச செயலகத்தில்   ஊழியர்களுக்கான  உத்தியோகபூர்வ ரி.சேர்ட் வாங்கியதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென பிரதேச செயலர் தயாமோகன் அறிவித்துள்ளார்.குறித்த பிரதேச செயலக ஊழியர்களுக்கான உத்தியோக பூர்வ  ரி.சேர்ட்டை,  தைத்து வாங்குவதற்கு உள்ளூரில் உள்ள நிறுவனங்களை புறம் தள்ளி , கொழும்பில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இருந்து ரி.சேர்ட்டை கொள்வனவு செய்துள்ளனர்.

குறித்த ஒரு ரி.சேர்ட்டுக்கு  200 ரூபாய் அதிகமாக கொடுத்து வாங்கியுள்ளனர். அவ்வாறாக 500 ரி.சேர்ட் களை ஒரு இலட்ச ரூபாய்க்கும்  அதிகமான  பணத்தினை மேலதிகமாக கொடுத்து கொள்வனவு செய்துள்ளனர்.

ஊழியர் நலன்புரி சங்கத்தின் பணத்திலேயே ரி.சேர்ட் கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமையால் , நலன்புரி சங்கத்தின் ஒரு இலட்ச  ரூபாய்க்கும்  அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை , ரி.சேர்ட் கொள்வனவுக்காக கேள்வி கோரல் எதுவும் இல்லமால்  அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவரின் தன்னிச்சையான முடிவின் பிரகாரமே ரி.சேர்ட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதனை பிரதேச செயலர் தயாமோகன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அதனால் குறித்த ஊழியர் ரி.சேர்ட் கொள்வனவில் பெருமளவான பணத்தினை  தரகு பணமாக பெற்றுக்கொண்டு இருக்கலாம் எனும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுமெனவும் அறிவித்துள்ளார்.