April 23, 2024

பிரித்தானியாவில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகள்!!

தமிழர் ஒருங்கிணைப்பு குழு பிரித்தானியா விளையாட்டுத்துறை ஒருங்கமைப்பில் இன்று ரவுண்ட்ஷோ மைதானத்தில் , இன்றய நிகழ்வுகளில்

ஆரம்ப நிகழ்வாக தமிழீழ தேசிய கொடியினை தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் விளையாட்டு துறை பொறுப்பாளார் திரு கோதை அவர்கள் ஏற்றி வைத்தார் தொடர்ந்து பிரித்தானிய கொடியினை தமிழ் ஒருங்கிணைப்பு குழு இளையோர் அமைப்பு பொறுப்பாளர் செல்வி பாப்ரா ராஜன் அவர்கள் ஏற்றி வைத்தார். கல்லறை வணக்கத்துடன் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.

தமிழர்களுக்கான விளையாட்டு துறையில் தொடர்ந்து சேவையாற்றியோர்களுக்கான கௌரவிப்பினை தொடர்ந்து, சிறுவர்களுக்கான போட்டி பரிசில்கள் , உதை பந்தாட்டம் , துடுப்பாட்டம் மற்றும் ஏனைய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான கேடையங்களும் வழங்கபட்டது . தேசிய கொடிகள் கையேந்தப்பட்டு நிகழ்வுகள் நிறைவு பெற்றது.உதை பந்தாட்டம் 9 வயதிற்கு உட்பட்ட பிரிவில் லூசியம் தமிழ்ஷ் அணி , 11 வயதுக்கு உட்பட்ட பிரிவில் லூசியம் அணி, 13 வயதிற்கு உட்பட்ட பிரிவில் சிங்கிங் விஷ் அணி, 15 வயதிற்கு உட்பட்ட பிரிவில் புளு லைத் அணி, 17 வயதிற்க்கு உட்பட்ட பிரிவில் ஜப்னா 11 அணி , 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் வல்வை புளு அணி , 30 வயதிற்கு மேற்பட்ட பிரிவில் லூசியம் யுனைற்றட் அணி , 40 வயதிற்க்கு மேற்பட்ட பிரிவில் ஒலிம்பிக் ரெட் அணி, 50 வயதிற்க்கு மேற்பட்ட பிரிவில் ஒலிம்பிக்ஸ் அணியும்,  வயதெல்லை அற்ற நிலை அணியில் யு கே வ் சி எ அணியினரும் தங்களுடைய வெற்றி கிண்ணங்களை கையெந்தினார்கள்.