April 25, 2024

லிந்துலை பகுதியில் விபத்து! இலங்கையின் நடிகை பலி!

லிந்துலை பகுதியில் விபத்து! இலங்கையின் நடிகை பலி!

தலவாக்கலை – லிந்துலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையின் மூத்த நடிகை ஹயசிந்த் விஜேரத்ன உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் உயிரிழக்கும் போது வயது 75 ஆகும். நுவரெலியா – தலவாக்கலை வீதியின் லிந்துலை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.