April 18, 2024

பேட்மிட்டன் அரையிறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி! சோகத்தில் ரசிகர்கள்

ஒலிம்பிக் மகளிர் பேட்மிட்டன் ஒற்றையர் பிரிவில் வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காலிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை அகேன் யமாகுச்சியை வீழ்த்திய பி.வி.சிந்து 21-13, 22-20 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி இருந்தார்.

இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சீன தைபேயின் தை சூ யிங்கிடம் 18 -21, 12 – 21 என்ற என்ற நேர் செட் கணக்கில் வீழ்ந்தார் பி.வி சிந்து. நாளை நடைபெறும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் சீனாவின் பின் ஜியோவோவை எதிர் கொள்கிறார்.