April 23, 2024

செயற்பட தொடங்கியது சிங்கப்பூரின் சோலார் வயல்!

உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி பண்ணைகளில் ஒன்றாக  சிங்கப்பூரில் நீர்த்தேக்கத்தில் மிதக்கும் சூரிய சக்தி பண்ணை (world’s biggest floating solar panel farms) அமைக்கப்பட்டு நிறைவுசெய்துள்ளது. இதனை நேற்று  புதன்கிழமை (ஜூலை 14) அதிகாரப்பூர்வமாக  பிரதமர் லீ ஹ்சியன் லூங் பார்வையிட்டுள்ளார்.

இது சிங்கப்பூரில் உள்ள தெங்கே நீர்த்தேக்கத்தில் (Tengeh Reservoir) மிதக்கும் ஒரு லட்சத்து இருபத்தி இரண்டாயிரம் சோலார் பனல்கள் மூலம் மின்சார உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. 45 ஹெக்டேயர் பரப்பளவில் – சுமார் 45 கால்பந்து மைதானங்களுக்கு சமமானதாக அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மின் உற்பத்தி செய்வதற்காக தெங்கே நீர்த்தேக்கத்தின் மேல்  122,000 சோலார் பனல்கள் உள்ளன, அவை 25 ஆண்டுகள்  அளவுக்கு செயற்படும்.

நிலக்கரிக்கு மாற்றாக சோலார் பனல்கள் மூலம் இங்கு நடைபெறும் மின் உற்பத்தியால் ஆண்டுக்கு 32 ஆயிரம் டன் கார்பன் வளிமண்டலத்தில் கலப்பது தடுக்கப்படுவதுடன் சிங்கப்பூரில் உள்ள ஐந்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை இயக்க போதுமான மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.