April 20, 2024

முல்லையில்: தொலைபேசிகளை பறிக்க முயற்சி!

முல்லைத்தீவு கேப்பாப்புலவு விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொழிற்சங்க பிரதிநிதிகளது போராட்டங்கள்

இலங்கை அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.அதனை தொடர்ந்து அவர்களது தொலைபேசிகளை துண்டிக்க பாதுகாப்பு தரப்பிற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருவதாக தெரியவருகின்றது.எனினும் தனிமைப்படுத்தப்பட்டவர்களது  தொலைபேசிகளை பறிமுதல் செய்யமுடியாதென அதிகாரிகள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலை சட்டமூலத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுவர்கள் முல்லைத்தீவு கேப்பாபிலவு கொரோனா தடுப்பு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மற்றும் பௌத்த துறவிகள் இருவர் உள்ளிட்டவர்கள் கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் தனிமை படுத்தல் மையத்திலிருந்தே கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள்.

கொத்தலாவ சட்டத்தினை உடன் கிழித்தெறி என்ற தமிழில் சிங்கள மொழியில் எழுதப்பட்ட வாசகங்களை தாங்கியவாறு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து கவனயீர்ப்பினை முன்னெடுத்துள்ளமை தெரிந்ததே.