April 18, 2024

ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கப் படைகள் நீங்கிச் செல்ல அங்கு ரஸ்யாவின் செல்வாக்கு ஓங்கி நிற்கின்றதா?

FILE - In this March 10, 2011, file photo, Vice President of the United States Joe Biden, left, shakes hands with Russian Prime Minister Vladimir Putin in Moscow, Russia. Putin won’t congratulate President-elect Joe Biden until legal challenges to the U.S. election are resolved and the result is official, the Kremlin announced Monday, Nov. 9, 2020. (AP Photo/Alexander Zemlianichenko, File)

ரஸ்யாவின் ஆதரவோடு ஆப்கானிஸ்தானை மீண்டு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் தலிபான்கள் தீவிரம்

நாட்டின் பெரும்பகுதிகள் தற்போது தலிபான்கள் வசம்.

உலக நாடுகளோ அன்றி ஆப்கானிஸ்த்தான் நாட்டு மக்களோ அன்றி அமெரிக்காவோ சற்றும் எதிர்பாராத வகையில் பிரச்சனைக்குரிய நாடாக விளங்கும் ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கப் படைகள் நீங்கிச் செல்ல அங்கு ரஸ்யாவின் செல்வாக்கு ஓங்கி நிற்பது போன்ற செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இதே வேளையில் இதுவரைகாலமும் பல இழப்புக்களின் மத்தியில் ஆப்கானிஸ்த்தானில் நிலை கொண்டிருந்த பிரித்தானிய படைகளும் கொஞ்சம் கொஞ்சமாக ஆப்கானிஸ்த்தானை விட்டு வெளியேறுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், ரஸ்யாவின் ஆதரவோடு ஆப்கானிஸ்தானை மீண்டு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் தலிபான்கள் தீவிரம் காட்டுவதாகவும், அதில் அவர்கள் வெற்றி கண்டுள்ள்தாகவும் வெளிநாட்டு செய்தி நிறுவனங்களின் நிருபர்கள் தெரிவித்துள்ளார்கள். முக்கியமாக தற்போது தலிபான்களுக்கு உலகளவில் ஊடகங்களைச் சந்திக்கும் வாய்ப்பை ரஸ்யா வழங்கியுள்ளதாகவும், முக்கியமாக தலிபான்களின் சிரேஸ்ட தலைவர்கள் மற்றும் போராளிகள் ஆகியோர் தற்போது ரஸ்யாவில் தங்கியிருந்து தங்களைப் பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதை செய்திகள் வாயிலாக அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது

அத்துடன் பிந்திக் கிடைத்த செய்திகளின்படி ஆப்கானிஸ்த்தான் நாட்டின் பெரும்பகுதிகள் தற்போது தலிபான்கள் வசம் சென்றுள்ளதாகவும் தலிபான்களின் மீள் உருவாக்கத்தால் ஆப்கானிஸ்த்தான் படைகள் தடுமாற்றமடைந்த நிலையில் காணப்படுவதாகவும் ஆப்கானிஸ்த்தானிலிருந்து வெளிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான நிலையில் வடக்கு ஆப்கானிஸ்தான் முழுவதும் கடுமையான தாக்குதலின் பின்னர் ஈரான் மற்றும் துர்க்மெனிஸ்தானுடனான முக்கிய எல்லைப் பிரதேசங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக ஆப்கானிஸ்த்தானின் அரச அதிகாரிகளே வெளிநாட்டு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

ஈரானுக்கு அருகிலுள்ள இஸ்லாம் காலா, மற்றும் துர்க்மெனிஸ்தானின் எல்லையில் உள்ள டோர்குண்டி ஆகிய இரண்டு முக்கிய எல்லை நகரங்களை கைப்பற்றியதாகவும் தலிபான்களின் சிரேஸ்ட தலைவர்கள் நடத்திய ஊடகச் சந்திப்பின் போது தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு நேற்று முன்தினம் ஆப்கானிஸ்த்தான் எல்லையில் உள்ள பிரதேசத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான் ஆயுததாரிகள் அங்கிருந்து ஆப்hனிஸ்த்தான் நாட்டு சுங்க அலுவலகத்தையும் கைப்பற்றி அதன் அதிகாரிகளை சிறைபிடித்தது மட்டுமன்றி மேற்படி சுங்க அலுவகத்தின் கூரையில் இருந்து ஆப்கானிஸ்தான் தேசியக் கொடியை தலிபான் ஆயுததாரிகள் கீழே இறக்குவதை காட்டும் புகைப்படங்களும் வீடியோ காட்சிகளும் தற்போது வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

மேலும், அமெரிக்கத் தலைமையிலான சமாதானப் படைகள் தமது கடைசி படை அணிகளையும் ஆப்கானிஸ்தானிலிருந்த அகற்றுவதால் தலிபான்கள் ஆயுததாரிகள் ஆப்கானிஸ்தான் முழுவதும் விரைவாக பல நகரங்களைக் கைப்பற்றி வருவதாகவும் அறியப்படுகின்றது. முன்னர் அவர்கள் கைப்பற்றியிருந்த கிராமங்கள் நகரங்கள் பல தற்போது தலிபான்களின் கைகளுக்கு வந்துள்ளன.

இதேவேளை, ஆப்கானிஸ்தானில் 85 வீதமான நிலப்பரப்பை தங்கள் அணிகள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக தலிபான் சிரேஸ்ட தலைவர்கள் கூறுகின்றனர் –

இதேவேளை திடீரென ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டு இந்த மாற்றம் உலக நாடுகளையும் அவற்றின் தலைவர்களையும் தடுமாற்றம் அடைய வைத்திருப்பதாகவும், இவ்வாறு தலிபான்கள் மீளவும் உருவாக்கம் பெறுவது என்பது மீண்டும் அல்-கொய்தா இயக்கத்தின் தாக்குதல்களை உலகம் காணப்போகின்றது என்றும் இந்தியாவின் மூத்த ஆங்கிலப் பத்திரிகை ஒன்று தனது நேற்றைய ஆசிரிய தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. இது உலகளவில் மிகுந்த அச்சத்தைத் தூண்டுவதாகவும் அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது

இவ்வாறான நிலையில் பிந்திக் கிடைத்த தகவல்கதளின் படி ஆப்கானிஸ்த்தான் நாட்டின் 400 மாவட்டங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் தலிபான் கட்டுப்பாட்டில் வந்து விட்டன என்றும் மேற்கில் ஈரானிய எல்லையிலிருந்து சீனாவின் எல்லைப்புறம் வரை நாட்டின் பல இடங்களில் தலிபான் ஆயுததாரிகள் நிலைகொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது

இதேவேளை அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உத்தரவின் பேரில் இந்த வார தொடக்கத்தில் அமெரிக்கப் படைகள் அமைதியாக ஆப்கானிஸ்த்தான் பாக்ராம் விமானநிலையத்திலிருந்து புறப்பட்டனர், இது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் பிரதான மையமாக இருந்த ஒரு பரந்த தளமாகும், இங்கு ஓரே தடவையில் பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை அமெரிக்கா அங்கு நிலைகொள்ள வைத்திருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது

இந்த தகவல்கதளின் படி சுமார் 20 ஆண்டு கால மோதலுக்குப் பின்னர் மேற்குலக நாடுகளின் படைகள் ஆப்கானிஸ்த்தானை விட்டு பின்வாங்குவதால் தலிபான் ஆயுததாரிகள் ஆப்கானிஸ்தான் முழுவதும் விரைவாக தங்கள் ஆதிக்கத்தைக் கொண்டுவந்துள்ளதாகவும் பல இடங்களில் இராணுவ ரீதியாகவும் முன்னேற்றங்களை அடைந்துள்ளனர் என்றும் அறியப்படுகின்றது

மேலும் ஆப்கானிஸ்த்தானைச் சுற்றியுள்ள ஈரான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய ஐந்து நாடுகளின் எல்லையை ஆக்கிரமித்துள்ள தலிபான்கள் 85 வீதமான பகுதிகளை கட்டுப்படுத்துவதாக தலிபான்கள் தெரிவிக்கும் நிலையில், – ஆப்கானிய நாட்டின் தேசிய பாதுகாப்புப் படையினர் தப்பி ஓடத் தொடங்கியுள்ளதாகவும் அறியப்படுகின்றது.

இதற்கிடையில் ஆப்கானிஸ்தானில் கடந்த வாரத்தில் மட்டும் குறைந்தது 56 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது தாக்குதல்கள் காரணமாகவா அல்லது நோயின் தாக்கத்தாலா என்பது பற்றிக் குறிப்பிடப்படவில்லை.

இதேவேளை இதுவரை காலமும் உலக நாடுகள் பலவற்றின் பங்களிப்போடு கூட்டாக, ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த பிரித்தானியாவின் இராணுவம், தலிபான்களுக்கு எதிரான நீண்ட போராட்டத்தில் பணியாற்றியது பற்றி தெரிவித்துள்ள பிரித்தானியாவின் பிரதமர் “வீரம் மற்றும் தியாகத்திற்கு” அஞ்சலி செலுத்தியதுடன் ஆப்கானிஸ்தானுக்கான தனது உறுதிப்பாட்டை இங்கிலாந்து கைவிடவில்லை என்றும், தொடர்ந்து அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு நிதிகளை வழங்குவதாகவும் வலியுறுத்தியுள்ளார்

இதற்கிடையில், தலிபான்கள் ரஸ்யாவிற்கும் மத்திய ஆசியா பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுக்கும் ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்று உறுதியளிக்க முயலும் இவ்வேளையில், ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் தலிபான் போர்நிறுத்தம் குறித்து விவாதித்து வருவதாகவும், தோஹாவில் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடந்தால் தலிபான்களின் தாக்குதலை நிறுத்தப்பட்டு விடும் என்றும் அவர்கள் தரப்பில் அறிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், தலிபான்கள் மீதான தனது கட்டுப்பாட்டைக் காட்ட ரஸ்யாவானது அனைத்து தரப்பினரையும் அழைத்து, தேவைப்பட்டால் எல்லையில் மோதலைத் தடுக்க தீர்க்கமாக செயல்படும் என்றும் தெரிவித்துள்ள இந்த நேரத்தில், மோசமடைந்து வரும் சூழ்நிலையை எதிர்கொண்டு சீனா தனது படையினரை வெளியேற்றி வருகிறது.

இதேநேரத்தில் தலிபான்கள் நடத்திய பத்திரிகையாளர்கள் மாநாட்டின் அதன் சிரேஸ்ட தலைவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “ஆப்கானிய சமூகத்தின் அனைத்து பிரதிநிதிகளும் … ஆப்கானிய அரசை உருவாக்குவதில் பங்கேற்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று மாஸ்கோவில் கூறினார்.

இவ்வாறான நகர்வுகளுக்கிடையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இந்த நிலை தொடர்பாக அவர் தடுமாற்றம் அடைந்தவர் போலக் காணப்பட்டாலும் கடுமையாக பேசுவது போன்ற தொனியில் அவர் பேசினார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து இராணுவப் படைகளை வெளியேற்றுவதற்கான தனது முடிவை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் கடுமையாக ஆதரித்த பின்னர், நாட்டின் பெரும்பகுதிகள் தலிபான்களால் கைப்பற்றப்பட்டிருந்தாலும், அங்கு ஒரு புதிய உள்நாட்டுப் போர் வெடிக்கக்கூடும் என்பதை அவர் ஒப்புக் கொண்டார்.

அமெரிக்கா தொடர்ந்து ஆப்கானிஸ்த்தான் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இராஜதந்திர மற்றும் மனிதாபிமான ஆதரவை தொடர்ந்து வழங்கும் என்று தெரிவித்துள்ள அவர் அதே வேளையில், ஆப்கானிய மக்கள் தான் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும் என்றும், 20 ஆண்டுகால மோதலுக்குப்பின்னர் இன்னுமொரு தடவை ஆப்கானிஸ்த்தானில் மற்றொரு தலைமுறை அமெரிக்கர்களை ஈடுபடுத்த மாட்டேன் என்றும் கூறினார்.

மேலும், ஆப்கானிஸ்த்தானில் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக சுமார் 650 துருப்புக்கள் தங்கியிருந்தாலும், அமெரிக்க படைகளை இறுதியாக திரும்பப் பெறுவதற்கு திரு பிடன் ஆகஸ்ட் 31 வரை அவகாசம் வழங்கியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இராணுவ இருப்பு குறித்து தனது கருத்தைத் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 2001 ல் அந்நாடு மீது படையெடுப்பதற்கான உண்மையான காரணத்தை அமெரிக்கா அடைந்துவிட்டது, இது அல்கொய்தா போராளிகளை வேரறுப்பதும், அதே ஆண்டு செப்டம்பர் 11 அன்று தொடங்கப்பட்ட மற்றொரு தாக்குதலைத் தடுப்பதும் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே இனிமேல் அங்கு அமெரிக்கப்படைகளுக்கு “வேலை’ இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்

எனினும் பலர் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு ஏற்ப, அமெரிக்க பணி தோல்வியுற்றது என்ற கருத்துக்கு எதிராக ஜோ பைடன் கருத்துத் தெரிவிக்கும் போது, அமெரிக்காவிற்குப் பிறகு ஆப்கானிஸ்தான் முழுவதையும் அரசாங்கம் கட்டுப்படுத்த வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டார் எனினும் . ஆப்கானிஸ்தான் அரசாங்கமும் யுத்தம் தொடங்குவதற்கு முன்னர் போலவே வலிமையானதாகவே உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

‘நாங்கள் ஆப்கானிஸ்தானுக்கான தேசத்தைக் கட்டியெழுப்பவில்லை” என்று தெரிவித்துள்ள பைடன் “ஆப்கானிய தலைவர்கள் ஒன்று கூடி தங்கள் எதிர்காலத்தை நோக்கி அவதானமாகப் பயணிக்க வேண்டும்.” அண்மையில் நாட்களில் நிர்வாகம் மோதலை முடிவுக்குக் கொண்டுவர முயன்றது, இது ஒரு “வெல்ல முடியாத போர்” மற்றும் “இராணுவ தீர்வு இல்லை” என்று தனது முடிவை நியாயப்படுத்தினார்.

மேலும், “இன்னும் எத்தனை, இன்னும் எத்தனை ஆயிரம் அமெரிக்க புதல்வர்களையும் புதல்விகளையும் நீங்கள் பணயம் வைக்க தயாராக இருக்கிறீர்கள்?” என்று ஆப்கானிஸ்த்தானில், இராணுவ நடவடிக்கையை நீட்டிக்க அமெரிக்காவுக்கு அழைப்பு விடுப்பவர்களிடம் பைடன் கூறினார். அவர் மேலும் கூறுகையில், “ஆப்கானிஸ்தானில் மற்றொரு தலைமுறை அமெரிக்கர்களை நான் போருக்கு அனுப்ப மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, மாஸ்கோவில் தலிபானகளின் சிரேஸ்ட தலைவர்களின் கொண்ட குழுவொன்று வெள்ளிக்கிழமை ஆப்கானிஸ்தானில் 85 வீத நிலப்பரப்பைக் கட்டுப்படுத்தியதாகவும், எனினும் மற்றவர்களைத் தாக்கும் ஒரு தளமாக நாட்டை பயன்படுத்த அனுமதிக்காது என்றும் ரஸ்யாவுக்கு உறுதியளித்தது.

அமெரிக்கா உட்பட வெளிநாட்டுப் படைகள் கிட்டத்தட்ட 20 ஆண்டுகால சண்டையின் பின்னர் விலகிக் கொண்டிருக்கின்றன, இது ஆப்கானிஸ்தானில் புதிய நிலப்பரப்பைப் பெற முயற்சிக்க தலிபான் கிளர்ச்சியாளர்களைத் தூண்டியுள்ளது.

இதே வேளையில் நூற்றுக்கணக்கான ஆப்கானிய பாதுகாப்புப் பணியாளர்களையும் அகதிகளையும் எல்லையைத் தாண்டி அண்டை நாடான தஜிகிஸ்தானுக்கு தப்பிச் செல்ல வேண்டிய நிலை தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆப்கானிஸ்தான் பிராந்தியத்தில் இஸ்லாமிய அரசு செயல்படுவதைத் தடுக்க தலிபான்கள் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்றும், அது போதைப்பொருள் உற்பத்தியைத் முற்றாக நிறுத்திவிட முற்படும் என்றும் தலிபான்கiளின் சிரேஸ்ட தலைவர்கள் தெரிவித்தனர்.

“ஆப்கானிஸ்தான் பிராந்தியத்தில் இஸ்லாமிய அரசு செயல்படாது என்பதற்காக நாங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் … மேலும் எங்கள் பிரதேசங்கள் ஒருபோதும் நம் அண்டை நாடுகளுக்கு எதிராக பயன்படுத்தப்படாது” என்று தலிபான் அதிகாரி ஷாஹாபுதீன் டெலவர் ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலம் கூறினார்.

ஆப்கானிஸ்த்தான் எல்லையில் பதட்டங்களின் அதிகரிப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ள ரஸ்யா, இதில் மூன்றில் இரண்டு பங்கு தற்போது தலிபான்கள் கட்டுப்படுத்துகின்றார்கள் என்றும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ரஸ்யாவின் வெளியுறவு அமைச்சானது, ஆப்கானிஸ்தான் மோதலின் அனைத்து பக்கங்களிலும் கட்டுப்பாட்டைக் காட்ட அழைப்பு விடுத்ததுடன், தேவைப்பட்டால் எல்லையில் ஆக்கிரமிப்பைத் தடுக்க தமது நாடு தீர்க்கமாக செயல்படும் என்று கூறியுள்ளது.

மேலும், தலிபான்களின் சிரேஸ்ட தலைவர்களின் தூதுக்குழு மாஸ்கோவில் நடத்திய செய்தி மாநாட்டில், தமது இயக்கம், சிறுபான்மையினரின் உரிமைகளை மதிக்கும் என்றும், அனைத்து ஆப்கானிய குடிமக்களும் இஸ்லாமிய சட்டம் மற்றும் ஆப்கானிய மரபுகளின் கட்டமைப்பில் ஒழுக்கமான கல்விக்கான உரிமையைப் பெற வேண்டும். “ஆப்கானிய சமூகத்தின் அனைத்து பிரதிநிதிகளும் … ஆப்கானிய அரசை உருவாக்குவதில் பங்கேற்க வேண்டும் என்றும் பகிரங்கமாக அறிவித்துள்ளது.