April 24, 2024

சக்கர நாற்காலியில் பாராளுமன்றத்திற்குச் சென்ற இரா. சம்பந்தனை விமர்சித்து சமூக ஊடகங்களில் ‘பதிவுகள்’

நேற்று செவ்வாய்கிழமை 6ம் திகதி ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்து தனது உதவியாளர்கள் சகிதம் பாராளுமன்றத்திற்குச் சென்ற இரா. சம்பந்தனுக்கு எதிராக சமூக ஊடகங்களில் ‘விமர்சனங்கள்’ முன்வைக்கப்படுகின்றன என எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.

“இவ்வளவு கஸ்டப்பட்டு மக்களுக்கு சேவையாற்ற விரும்பியவர் கடந்த மைத்திரி- ரணில் காலத்தில் எவ்வளவு சேவைகள் செய்திருக்கலாமே” என்று பலர் முகநூலிலும் டுவிட்டர் பக்கங்களிலும் பதிவிட்டுள்ளனர்.

மேலும் சிலர் ” சம்பந்தன் ஐயா, சம்பளத்திற்கும் சலுகைக்குமாகவே இவ்வாறு சிரமங்களோடு பாராளுமன்றத்திற்கு வருகின்றார்” என்றும் ” இவருக்கு வாக்களித்த திருகோணமலை வாக்காளர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும்” என்றும் கேள்விகளை முன்வைத்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நீண்ட நாட்களுக்குப் பின்னர் நேற்று செவ்வாய்கிழமை சக்கர நாற்காலியில் நாடாளுமன்றத்திற்கு சென்றார்

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ‘குள்ள நரி’ ரணில் விக்ரமசிங்கவின் உதவியுடன் அவர் தனது ஆசனத்தில் அமர்ந்துள்ளார். இதைப் பார்த்து சிலர் கைகொட்டிச் சிரித்துள்ளார்கள்.
நாடளுமன்றம் நேற்று செவ்வாக்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 10 மணிக்கு கூடிய வேளையில் சபை அமர்வுகள் ஆரம்பித்து சிறிது நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சக்கர நாற்காலியில் பாராளுமன்ற உதவியாளர்களால் சபைக்கு அழைத்துச் செல்லப்பட்டாடர்

ஆனால் சக்கர நாற்காலியில் வருகை தந்தால் எதிர்க்கட்சித் தரப்பில் கடைசி வரிசையிலேயே அமர்ந்திருக்க முடியும் என்ற ஏற்பாடுகள் அங்கு கடைப்பிடிக்கப்பெற்று வருகின்றன.

அதற்கு விரும்பாத சம்பந்தன் எம்.பி தனது ஆசனத்தில் அமர வேண்டும் என கூறியதால் அவரை வெளியே அழைத்துச் சென்ற உதவியாளர்கள் அவரை கைத்தாங்கலாக மீண்டும் சபைக்குள் அழைத்து வந்தனர்.

தனது ஆசனத்துக்கு செல்வதற்கு சம்பந்தன் பெரும் சிரமப்பட்டே சென்றார். சம்பந்தன் உள்ளே வரும்போதே அவரது அடுத்த ஆசனத்தில் அமர்ந்திருந்த ரணில் விக்ரமசிங்க சம்பந்தன் வருவதை அவதானித்து அவருக்கு உதவும் வகையில் சம்பந்தன் அமர வசதியாக அவரது ஆசனத்தை ஒழுங்குபடுத்திக் கொடுத்தார்.

.இந்தச் செய்தி தற்போது சமூக ஊடகங்களில் மிக வேகமாகவே ஊசலாடுகின்றது என்பதையும் பலர் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.