April 19, 2024

வறுமை:இணையத்தில் சிங்கள பெண்கள்!

தென்னிலங்கையில் வறுமை சிறுமிகளை இணைய வெளியில் விற்பது வரை சென்றுள்ளது.

இந்நிலையில் வழமை போல அதனை ஊதிப்பெருப்பித்து மக்கள் கவனத்தை திருப்பிவருகின்றது கோத்தா அரசு.

இந்நிலையில் கல்கிசையில்  15 வயதான சிறுமியை இணையத்தளம் மூலம் விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்;.

இவர்கள் குறித்த சிறுமியை விற்பனை செய்வதற்கான விளம்பரத்தை பிரசுரித்த இணையத்தளத்தின் உரிமையாளரும் அதன் பணக் கட்டுப்பாட்டாளர்கள் என தெரிவித்தார்.   பாணந்துறை மற்றும் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

இதுவரை இரண்டு பெண்கள் உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதில் ஆளும் தரப்பின் உள்ளுராட்சி மன்ற தவிசாளர்,கப்பல் கப்டன் என பலரும் கைதாகியுள்ளனர். இன்னும் 14 பேரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். தொலைபேசி உரையாடல்கள், குறுஞ்செய்திகள் என்பன சோதனை செய்யப்பட்டு வருகின்றன.