April 25, 2024

சாவகச்சேரியில் சீனர்கள் ஏன் பதுங்கியுள்ளனர்?

தென்மராட்சியின் சாவகச்சேரியில் பதுங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட சீனர்கள் என்ன செய்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன்.

யாழ்ப்பாணம் தீவக பகுதியில் புதுப்பிக்கத்தக்க எரி சக்தி அமைப்பை உருவாக்குவதற்கு சீன நிறுவனம் ஒன்றுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் நுரைச்சோலை அனல் மின்நிலையம் சீனாவினால் நிறுவப்பட்டது அந்த அனல் மின் நிலையம் தொழில்நுட்ப ரீதியாக பாதிக்கப்படுவதும் மாதக்கணக்கில் திருத்துவது போன்ற விடயங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் யாழ் தீவுப்பகுதியில் புதுப்பிக்கத்தக எரி சக்தி அமைப்பை உருவாக்குவது என்பது தமிழ் மக்களுக்கும் இந்தியாவின் மக்களுக்கும் உகந்த செயல் அல்ல.

இது இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையாகவே இருக்கும்.யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவு  இந்தியாவுக்கு மிக அண்மையிலுள்ள தீவாகும். இங்கு உருவாக்கப்படுகின்ற தொழில்நுட்பம் என்பது இந்தியாவுக்கு எதிராக செயற்படும் செயற்பாடாகவே இருக்கும்.அது வடக்கிலுள்ள மக்களுக்கும் பிரச்சினையாகவே இருக்கும் .

சாவகச்சேரியில் 60 பேருக்கு மேற்பட்ட சீனாவைச்சேர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

தீவுகளை நோக்கி சீனாவின் அபிவிருத்தி என்பது இந்தியாவை சீண்டுவதாகவே உள்ளது. சிறிய தீவாகவுள்ள நெடுந்தீவு நயினாதீவு மற்றும் அனலைதீவு போன்ற பகுதிகளில் எரி சக்தி நிறுவனங்களை உருவாக்குவதற்கு சீனாவை இந்த மண்ணுக்கு கொண்டு வருவது என்பதை புத்தி சாலித்தனமான விடயமே அல்லவெனவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.