September 7, 2024

புத்தளம் ஆனைவிழுந்தானில் நில ஆக்கரமிப்பு?

 

ஆனைவிழுந்தான் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் ஒரு பகுதியை இயந்திரம் ஒன்றின் மூலம் அழிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஆலோசனை வழங்கிய வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெக்கோ இயந்திர சாரதியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இந்தத் தகவல் வெளிப்பட்டுள்ளது.

புத்தளத்திலுள்ள ஆனைவிழுந்தான் ரம்சார் ஈரவலையத்தின் ஒரு பகுதியை அழிக்க பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இயந்திர வாகனத்துடன் அதன் சாரதியை பொலிஸார் நேற்று (28) கைது செய்திருந்தனர்.