September 11, 2024

துரைராஜசிங்கத்துக்கு எதிராக கண்டனத் தீர்மானம்?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற தேசிய பட்டியல் விவகாரத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.துரைராஜசிங்கத்துக்கு

எதிராக இன்று (29)  கண்டனத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்க் குழுக் கூட்டத்திலேயே இந்தக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேசியப் பட்டியல் தெரிவு தொடர்பில் கட்சியின் சட்ட விதிகளை மீறிச் செயற்பட்டமை, கலையரசனை தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு தெரிவு செய்த விடயத்தை கட்சி தலைவருக்கு கூட தெரியாமல் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் அறிவித்தமை மற்றும் ஊடக சந்திப்பை தன்னிச்சையாக நடத்தியமை உள்ளிட்ட காரணங்களுக்காகவே இந்த கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன் துரைராஜசிங்கத்துக்கு எதிராக காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றதை தொடர்ந்து இன்றைய கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடனயே இந்த கண்டனத் தீர்மானம் நிறைவேறியுள்ளது.

இதேவேளை தேசிய பட்டியலுக்கு கலையரசன் தெரிவு செய்யப்பட்டமை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.